June 28, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

இந்திய தேசிய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் 53-வது பிறந்தநாள் விழா கோட்டக்குப்பத்தில் கொண்டாடப்பட்டது

இந்திய தேசிய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் 53-வது பிறந்தநாள் விழா கோட்டக்குப்பம் காயிதே மில்லத் ஆர்ச் அருகில் இன்று(19/06/2023) கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சியை, கோட்டக்குப்பம் நகர காங்கிரஸ் கட்சி துனைத் தலைவர் K. நசீர் அகமது (எ) பாரூக், வானூர் ஒன்றிய நிர்வாகி M.I. ஃபஜ்லூர் ரஹ்மான், நகர நிர்வாகிகள் A. சாதிக் பாஷா, முஹம்மது அனிஸ், சுபைதுல்லா ஆகியோர் விழாவிற்கு முன்னிலை வகித்தனர். காங்கிரஸ் மாவட்ட பொது செயலாளர் A.அப்துல் ரஷித் வரவேற்ப்புரை நிகழ்த்தினார்.

கோட்டக்குப்பம் நகர காங்கிஸ் நிர்வாகிகள் முன்னிலையில் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் மற்றும் இனிப்பு வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

நிகழ்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக இந்திய ஒற்றுமை இயக்கம் தேசியக் குழு உறுப்பினர் இனாமுல் ஹசன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பெரியநாயகி, சேவா தள தலைவி புஷ்பா ருக்மணி, கோட்டக்குப்பம் நகர நிர்வாகிகள் ஜாகிர் உசேன், முகமது கவுஸ், சம்பத் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

வக்ஃபு போர்டு வசம் இருந்த கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் மீண்டும் பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைப்பு.

இந்திய அரசியலமைப்பு சட்ட விழிப்புணா்வு சைக்கிள் பயணம்

டைம்ஸ் குழு

முத்தியால்பேட்டை கோட்டக்குப்பம் எல்லையில் நான்கு சக்கர வாகனங்களுக்கு தடை

Leave a Comment