30.6 C
கோட்டக்குப்பம்
May 20, 2024
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

லாப நோக்கத்திற்கா கூட்டு குர்பானி முறை?!!

தற்போது குர்பானி கொடுக்க வேண்டிய நாட்கள் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது. வசதி படைத்த அனைவரின் மீதும் குர்பானி என்பது கடமையாக்கப்பட்டுள்ளது. வசதி படைத்தவர்கள் ஆட்டை குர்பானி கொடுக்க வேண்டும்.

வசதி குறைந்தவர்கள் ஒட்டகம் அல்லது மாட்டை ஏழு நபர்களாக சேர்ந்து கொண்டு குர்பானி கொடுப்பதற்கு மார்க்கம் அனுமதித்துள்ளது. அதன்படி, தற்பொழுது பெரும்பாலான நபர்கள் மாடுகளில் கூட்டுக் குர்பானி சேர்ந்து தங்களுடைய குர்பானிகள் கடமையை நிறைவேற்றி வருகிறார்கள்.

கூட்டு குர்பானி முறை ஏன் உருவாக்கப்பட்டது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். ஆடு போன்ற சிறு விலங்குகளை தன் இல்லங்களில் அறுத்து குர்பானி கொடுத்து விடலாம். ஆனால் மாடு போன்ற பெரிய கால்நடைகளை குர்பானி கொடுக்க அதற்கு தேவையான இட வசதியும் ஆட்களும் தேவைப்படுகிறது.

மேலும், 7 நபர்களாக சேர்ந்து கொடுப்பதற்கு மார்க்கம் அனுமதித்து உள்ளதால், அனைவருக்கும் பொதுவான இடத்தில் கொடுப்பதற்காகவே இந்த முறை நடைமுறைப்படுத்தப்படுகிறது.

மேலும், குர்பானி கொடுப்பதற்கு தேவையான ஆட்கள் வசதியும், இட வசதியும் தேவைப்படுவதால் அது தற்போது நாம் வசித்து வரும் சிறு இல்லங்களில் அதற்கான வசதி வாய்ப்புகள் இல்லாமல் போய்விடும்.

சிலர் கூட்டாக ஒன்று சேர்ந்து தங்களின் குர்பானி கடமையை நிறைவேற்ற ஒரு இடத்தை தேர்வு செய்து அனைவருக்குமாக கூட்டுக் குர்பானி கொடுத்துவந்துள்ளார்கள். அந்த செயலில், எந்த விதமான வணிகம் மற்றும் லாப நோக்கங்கள் இல்லாமல் மொத்த செலவினத்தை அனைவரும் சமமாக பிரித்துக் கொள்வார்கள்.

மக்களிடையே குர்பானி பங்குகளை வசூல் செய்து, அது பொதுவான இடத்தில் வைத்து இந்த கால்நடைகளை அவர்களின் பெயரால் குர்பானி கொடுக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு குர்பானி கொடுக்கப்பட்ட நடைமுறையில் சில ஆண்டுகளுக்கு முன்புவரை எந்த விதமான லாபம் நோக்கம் இன்றி ஒரு மாட்டிற்கு 7 நபர்கள் என்று குர்பானி பங்கு சேர்ந்து அந்த மாட்டை அறுத்து அதற்கான செலவினங்களை குர்பானி கொடுத்தவர்களுக்குள்ளே பங்கிட்டு கொண்டு அதை முறையாக செய்து வந்தார்கள். இந்த முறையில் எந்தவிதமான வணிக நோக்கமும், லாப நோக்கமும் இல்லை.

சில ஆண்டுகளுக்கு, பிறகு மார்க்க கல்வி கற்றுக் கொடுத்து வரும் அரபி மதரஸாக்கள் அந்தந்த மஹல்லா மக்களிடையே குர்பானி தொகைகளை வசூல் செய்து, அவர்களின் சார்பாக குர்பானி கொடுக்க நினைத்து வைத்தவர்களின் சார்பாக அவர்களின் கூட்டு குர்பானி முறையில் கடமைகள் நிறைவேற்றிக் கொடுத்தார்கள்.

அவ்வாறு மதரஸாக்கள் மூலம் கொடுக்கப்பட்ட கூட்டுக் குர்பானிகளில் மீறும் தொகை மற்றும் அந்த குர்பானி தோள்களை விற்ற வகையில் கிடைக்கும் தொகையை, மார்க்க கல்வி கற்று வரும் மாணவர்களுக்கு உணவிற்காகவும், புத்தகங்கள் வாங்கி கொடுப்பதற்காகவும் பயன்படுத்தி வருகிகிறார்கள். அந்த நடைமுறை இன்றும் கூட பல அரபுக் கல்லூரிகளில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

குர்பானியின் அடிப்படை செலவின சட்ட திட்டங்கள் என்னவென்று பார்த்தால், குர்பானிக்காக மாட்டை வளர்த்து பராமரித்து அதை அறுத்து கொடுக்கும் தொழிலாளிக்கு கூலியாக அந்த இறைச்சியையோ, அல்லது அந்த கால்நடை கட்டப்பட்ட கயிற்றையோ கூலியாக கொடுக்கக் கூடாது என்றும், மேலும் குர்பானியின் செலவு போக மீதப்படும் தொகையை அல்லது இந்த குர்பானி தோள்கள் விற்ற பணத்தில் பள்ளிவாசல் மற்றும் மதரசா போன்ற பொது கட்டடங்கள் அல்லது தன்னுடைய தனிப்பட்ட கட்டிடங்கள் பராமரிப்பு செலவிற்கோ அல்லது தன்னுடைய சொந்த செலவிற்கும் பயன்படுத்தக் கூடாது என்று வரையறுக்கப்பட்டுள்ளது.

சில தனி நபர்கள் கொடுக்கும் கூட்டுக் குர்பானியில் மீறும் தொகையை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது. வணிக நோக்கத்திலோ அல்லது லாப நோக்கத்திலோ குர்பானின் பங்குகளை பெற்று குர்பானி கொடுக்கக்கூடாது.

ஆகவே நம்முடைய குர்பானிகளை நமக்கு இட வசதிகள், ஆட்கள் வசதிகள் இருந்தால் நம்முடைய வீட்டிலேயே நம்முடைய இடத்திலேயே இந்த கடமையை நிறைவேற்றிக் கொள்ளலாம்.

அவ்வாறு இட வசதி, ஆட்கள் வசதி இல்லாத சூழ்நிலையில், நாம் கூட்டுக் குர்பானியில் சேரும் நிலை ஏற்பட்டால் கூட்டுக் குர்பானியின் பங்குத் தொகைகளை ஏழை மாணவர்கள், மார்க்க கல்வி கற்று வரும் அரபி மதரஸாக்கள் போன்ற பொது ஸ்தாபனங்களின் ஏற்பாட்டில் கொடுக்கப்படும் கூட்டுக் குர்பானியில் சேர்வதே நன்மை பயக்கும்.

நம்முடைய குர்பானிகள் இறை அச்சத்துடன் இறைவனுக்கு பொருத்தமான குர்பானியாக அமைய வேண்டும்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பதில் பாரத் பந்த் நடத்திட அனைத்து கட்சி சார்பாக இன்று கோரிக்கை விடுக்கப்பட்டது…

கோட்டக்குப்பத்தில் மசூதிகளே இல்லையா?

கோட்டக்குப்பதில் தொடர் மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியல்: நள்ளிரவில் பரபரப்பு

டைம்ஸ் குழு

Leave a Comment