30.5 C
கோட்டக்குப்பம்
May 13, 2024
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

சின்ன கோட்டக்குப்பம் தர்பிய்யதுல் பனாத் பெண்கள் அரபிக் கல்லூரி & மஸ்ஜிதே பிலாலலிய்யா வல் மத்ரஸா சார்பில் முப்பெரும் விழா.

சின்ன கோட்டக்குப்பம் தர்பியதுள் பனாத் பெண்கள் அரபிக் கல்லூரி & மஸ்ஜிதே பிலாலிய்யா வல் மத்ரஸா சார்பில் முபல்லிகா – முஅல்லமா பட்டமளிப்பு விழா, மலர் வெளியீட்டு விழா & இஸ்லாமிய அறிவியல் கண்காட்சி உள்ளடக்கிய முப்பெரும் விழாவாக 26/04/2024 வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை நடைபெற்றது.

முதலாவதாக, இஸ்லாமிய அறிவியல் கண்காட்சி வெள்ளிக்கிழமை ஆண்களுக்கும் மற்றும் சனிக்கிழமை பெண்களுக்கும் நடைபெற்றது. கண்காட்சியில் எறும்புகளின் பள்ளத்தாக்கு, பெரும் வெடிப்பு, சிலந்தியின் வீடு, இரு கடல்கள் சங்கமிக்கும் அத்தாட்சி, மனித மூளை, அறிவியல் பார்வையில் இதயம், தேனீக்களின் அற்புதம் உள்ளிட்ட பல்வேறு அறிவியல் சம்மந்தப்பட்ட ஆக்கங்கள் கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட்டது. மேலும், இந்த கண்காட்சியில் மாணவிகள் தங்களின் ஆக்கங்கள்களை அழகிய முறையில் மக்களுக்கு விளக்கம் அளித்தனர்.

அதேபோல், சனிக்கிழமை அன்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது. அதில், மாணவ- மாணவியர் நிகழ்ச்சி மற்றும் பெண்கள் சிறப்பு பயான் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தர்பியதுள் பனாத் பெண்கள் அரபிக் கல்லூரி & மஸ்ஜிதே பிலாலலிய்யா வல் மத்ரஸா நிர்வாகிகள் செய்திருந்தார். நிகழ்ச்சிக்கு ஊர் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள், மாணவ மாணவிகள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

குவைத் வாழ் கோட்டக்குப்பத்தினர் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்! (படங்கள்).

டைம்ஸ் குழு

கொரோனா பேரிடர் காலத்திலும் கோட்டக்குப்பம் பகுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் இரத்ததான முகாம்.

கோட்டக்குப்பதில் நாளை மூன்றாவது மெகா கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

டைம்ஸ் குழு

Leave a Comment