26.4 C
கோட்டக்குப்பம்
April 28, 2024
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் பர்கத் நகர் ஜமாத்தின் அன்பு வேண்டுகோள்!!

விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், கோட்டக்குப்பத்தில் (புதுச்சேரி அருகில்) பர்கத் நகர் பகுதி உருவாகி சுமார் 25 ஆண்டுகள் ஆகிறது.

கடந்த 2004-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பள்ளிவாசலில் இப்பகுதியில் வசிக்கும் 400 குடும்பங்களும் பயன்படுத்தி வருகின்றனர்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 50 மாணவர்களை கொண்டு பள்ளியின் எதிர்புறம் அமைந்துள்ள சிறிய கட்டிடத்தில் மக்தப் மதரஸா துவங்கப்பட்டது. காலப்போக்கில் மஹல்லாவாசிகளின் ஒத்துழைப்பினால் தற்பொழுது 310 மாணவ-மாணவிகள் மார்க்க ஆரம்பக் கல்வி கற்று வருகிறார்கள்.

ஒரு தலைமை ஆசிரியர் 4 ஆண் ஆசிரியர்கள், 9 பெண் ஆசிரியர்களை கொண்டு, இந்த மாணவ மாணவிகளுக்கு கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது.

ஆரம்பத்தில் குறைந்த எண்ணிக்கையில் மாணவர்கள் இருந்ததனால் சமாளிக்க முடிந்தது. தற்போது 310 மாணவர்களாக அதிகரித்துவிட்டதால் இடப்பற்றாக்குறை ஏற்பட்டு, தற்போது மதரஸா இயங்கிவரும் கட்டிடத்தில் முதல் தளம், இரண்டாம் தளம் என்று மூன்று தளங்களாக விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. அதற்காக உள்ளூர் வாசிகளும் அருகில் உள்ள புதுச்சேரி வியாபாரிகளும் நன்கொடைகள் கொடுத்து வந்த நிலையில் நடுவில் ஏற்பட்ட கொரானா ஊரடங்கு காலகட்டத்தில் மேற்கொண்டு நிதி ஆதாரங்கள் கிடைக்காமல் வேலைகள் தடைப்பட்டு விட்டது.

தற்போது அந்த கட்டிட பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளதால், அந்த கட்டிடத்தை முழுமைப்படுத்த இன்னும் இரண்டு லட்சங்கள் வரை பண உதவி தேவைப்படுகிறது.

மேலும் இந்த மதரசா கட்டிடத்தை ஒட்டி அமைந்துள்ள பள்ளியின் உலு செய்யும் கட்டிடம் பழுதடைந்து உள்ளதால் அதை மறுசீரமைப்பு செய்யவும் முடிவு செய்யப்பட்டு அதிலும் மூன்று தளங்களை ஏற்படுத்த முயற்சிகள் செய்யப்படுகிறது.

தற்போது ஒரு கட்டடம் 90 சதவீதம் முடிவடைந்த நிலையில் மற்றொரு கட்டடத்தின் கட்டிட பணிகள் துவங்கப்பட வேண்டும். இவை இரண்டுக்கும் சுமார் 25 லட்சம் ரூபாய் பணம் தேவைப்படுகிறது. ஆகவே இதை காண்பவர்கள் தாராளமாக நிதியுதவி பொருளுதவி வழங்குமாறு நிர்வாகத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

குறிப்பு: கோட்டகுப்பம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நமது பரகத் நகர் மஹல்லாவில்தான் அதிகப்படியான மாணவ மாணவிகள் ஓதி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு காரணம் மதரஸா ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு, மதரசா நிர்வாகிகளின் ஒத்துழைப்பும் ஒருங்கே கிடைப்பதால் முஹல்லாவாசிகள் ஒத்துழைப்போடு சிறப்பாக நடைபெற்றது. எல்லா புகழும் இறைவனுக்கே!


உங்கள் நிதி உதவிகள் வழங்க வங்கி கணக்கு விபரம்:

AL-MASJITHUL MUBARAK VAL MADRASA
AC No. 268901000009306
Indian Overseas Bank,
Muthialpet Branch.
IFSC No : IOBA0002689

Google Pay: +919443659830

தொடர்புக்கு:
N. சபீர் 90478 05390

S. பிலால் முஹம்மது 9443659830

A. முஹம்மது இப்ராஹிம் 8220932785

A.K.அப்துல் நாசர் 9952610060

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் காவல் நிலையம் சார்பாக பொதுமக்கள் மற்றும் காவல்துறை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு.

டைம்ஸ் குழு

குவைத்தில் பெருநாள் கொண்டாடிய நமது ஊர் நண்பர்கள்!

கோட்டக்குப்பம் காவல் உள்கோட்டத்தில் முகக் கவசம் அணியாதவா்களுக்கு 4 நாள்களில் ரூ.1 லட்சத்து 26 ஆயிரத்து 600-ம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

டைம்ஸ் குழு

Leave a Comment