Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் இந்திய கூட்டணி சார்பில் பானை சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பு.

விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் தி.மு.க தலைமையிலான வி.சி.க கட்சி வேட்பாளர் துரை.ரவிக்குமார் அவர்களுக்கு பானை சின்னத்தில் வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி, கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில், நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக வீடு வீடாக சென்று இன்று வாக்கு சேகரித்தனர். குறிப்பாக வார்டு 16, 17, 18, 19, 20, 21, 22 ஆகிய பகுதிகளில் வீடு வீடாக சென்று மற்றும் முக்கிய பகுதிகளில் வாகன பிரச்சாரமும் மேற்கொண்டனர். மகளிருக்கு வருடத்திற்கு ஒரு லட்ச ரூபாய் பெறவும், CAA & NRC போன்ற சட்டங்களை தடுக்கவும், எரிபொருள் விலை குறையவும் இந்தியா கூட்டணியை ஆதரித்து வாக்களிக்க விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

அதேபோல், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் கோட்டக்குப்பம் மகிமை கேட் முதல் சின்ன முதலியார் சாவடி வரை, 27 வார்டு முழுவதும் துரை. ரவிக்குமார் அவர்களுக்கு பானை சின்னத்தில் வாக்கு சேகரித்து வாகன பேரணி நடத்தினர். மேலும், ஜமியத் நகர் பகுதியில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

மனித நேய மக்கள் கட்சியின் சார்பில் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் மகளிர் அணி நிர்வாகிகள், முதல் கட்டமாக பழைய பட்டினப் பாதை, குண்டு கிராமம் 1, குண்டு கிராமம் 2, மரைக்காயர் தெரு -1, 2 முராதி வீதி, சத்தார் கார்டன், குயவர் தெரு ஆகிய பகுதிகளில் வீடு வீடாக சென்று நோட்டீஸ் வழங்கி பானை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

கோட்டக்குப்பம் திமுக நகர செயலாளரும், நகர மன்ற தலைவருமான திரு. எஸ்.எஸ்.ஜெயமூர்த்தி அவர்களின் தலைமையில் 13-வது & 14-வது வார்டில் இன்று பானை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். மேலும் திமுக & கூட்டணி கட்சியின் கவுன்சிலர்கள் அந்தந்த பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கொரோனா காலத்தில் இரத்த தான முகாம் நடத்திய கோட்டக்குப்பம் TNTJ-விர்க்கு விருது

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பத்தில் விபரம் தெரியாத அதிகாரிகள் மனு தாக்கல்; சந்தேகம் கேட்க வந்தவர்கள் ஏமாற்றம்.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் நகராட்சி சார்பில் மகளிர் தின விழா

டைம்ஸ் குழு

Leave a Comment