33.3 C
கோட்டக்குப்பம்
April 28, 2024
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

புதுச்சேரி நேரு வீதியை மிஞ்சும் கோட்டக்குப்பம் காந்தி ரோடு!

புதுச்சேரி மற்றும் சுற்றுவட்டார மக்கள் தங்களின் தேவைகளுக்கு பொருட்களை வாங்க குவியும் இடம் புதுச்சேரி நேரு வீதி, காந்தி வீதி, அண்ணாசாலை.

அதில் பிரதானமாக இடம்பிடிப்பது நேரு வீதி.

அதேபோன்று கோட்டக்குப்பம் மக்களும் பொதுவாக தங்களின் தேவைக்கு பொருட்கள் வாங்க புதுச்சேரியை நோக்கியே படையெடுப்பார்கள்.

குறிப்பாக புதுச்சேரி நேரு வீதி அமைந்துள்ள கடைகளில் பொருட்களை வாங்குவார்கள். அதனால் அந்த கடைத்தெரு மின் விளக்குகளாலும், மக்கள் நடமாட்டத்தினாலும் பரபரப்பாகவே காணப்படும்.

அந்த காட்சிகளை நினைவுபடுத்தும் விதமாக தற்போது கோட்டகுப்பம் காந்தி வீதி மகிமை முதல் ரவுண்டானா வரையும், மேலும் ரவுண்டானா முதல் ஆரோவில் பெரிய முதலியார் சாவடி வரையும் பரபரப்பு காணப்படுகிறது.

இதற்கு காரணம் மகிமை முதல் ரவுண்டானா வரையில் புதிது புதிதாக பல கடைகள் திறக்கப்பட்டுள்ளது.

சிறிய பெரிய ஜவுளி கடைகள், வீட்டு தேவை பொருட்கள் கடை, பிளாஸ்டிக் பொருட்கள் கடைகள், ஹார்டுவேர்ஸ் கடைகள், வீடு கட்டுமான பொருட்கள் கடைகள், பெரிய சைவம் மற்றும் அசைவ ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள், பாஸ்ட் புட் கடைகள், பிரியாணி கடைகள், சிறு சுகாதார மையங்கள், பியூட்டி பார்லர் என்று பல தரப்பு கடைகள் இங்கு புதிது புதிதாக உருவாகி பகல் நேரங்களில் போக்குவரத்து நெருக்கமும், இரவு நேரங்களில் மின் விளக்கு அலங்காரங்களாலும் மிகுந்த பரபரப்பாக காணப்படுகிறது.

கொரோனா நெருக்கடி கால கட்டத்தில் அருகிலுள்ள புதுச்சேரியில் நுழைவதற்கு தடைபட்டதால், தற்போது பல புதிய கடைகள் உருவாகியுள்ளது.

மாலை 6 மணிக்கு மேல் கோட்டக்குப்பம் காந்தி ரோட்டில் வாகன நெருக்கம் ஏற்பட்டு மிகுந்த பரபரப்பாக காணப்படுகிறது. கடைகளில் பொருத்தப்பட்டுள்ள மின்விளக்குகளால் வீதி முழுவதும் பளிச்சென்று காணப்படுவதால் காந்தி வீதியில் பயணிக்கும் போது புதிய நகரத்துக்குள் நுழைந்தது போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டு கடைகளின் மின்விளக்குகளால் வெளிச்சமாக காணப்படுகிறது.

சிறிது காலம் கோட்டக்குப்பத்தில் இருந்து வெளிநாட்டிலோ, வெளியூரிலோ இருந்து திரும்ப கோட்டக்குப்பம் வரும் நபர்கள் ஆச்சரியத்துடன் புதிய நகருக்கு நுழைந்தது போன்ற பிரமிப்பை அடைகிறார்கள்.

மேலும் இப்பகுதியில் புதிய கடைகள் தொடங்குவதற்கு கடைகளில் கிடைப்பது மிகவும் சிரமமாக உள்ளது என்று சில நண்பர்கள் பேசிக் கொள்வதும் காதில் விழுகிறது. அதேபோல், இப்பகுதியில் 4 புதிய வியபார சங்கம் அமைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

எது எப்படியோ தங்களின் சுய தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள தற்சார்பு எண்ணத்துடன் புதிது புதிதாக அமைந்துள்ள கடைகளில் கோட்டக்குப்பம் மக்கள் தங்கள் தேவைக்கான பொருட்களை வாங்கி அந்த கடைகளுக்கு ஒத்துழைப்பு கொடுத்தால் எதிர்கால நெருக்கடி காலங்களில் நம் சுயசார்பு பெறக்கூடிய வாய்ப்பாக அமையும் என்பதே தெரிகிறது.

ஆகவே, நமது பகுதியில் அமைத்துள்ள அனைத்து கடைகளுக்கும் ஆதரவு அளிப்போம்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் மிஸ்வாக் சார்பில் 450 பயனாளிகளுக்கு 15 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வினியோகம்.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் இப்ராஹிமின் கார்டன் பகுதியில் சாக்கடை ஒழுங்குபடுத்த கோரி மனு.

கோட்டக்குப்பம் நகராட்சி முதல் ஆணையர் திருமதி. பானுமதி அவர்களுக்கு ஊர் பிரமுகர்கள் வாழ்த்து.

டைம்ஸ் குழு

Leave a Comment