Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் காவல் உள்கோட்டத்தில் முகக் கவசம் அணியாதவா்களுக்கு 4 நாள்களில் ரூ.1 லட்சத்து 26 ஆயிரத்து 600-ம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் முகக் கவசம் அணியாதவா்களுக்கு காவல் துறை மூலம் ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. கடந்த 4 நாள்களில் மட்டும் ரூ.5.36 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

கரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் பொது இடங்களில் பொதுமக்கள் முகக் கவசம் அணியாவிட்டால் ரூ.200-ம் சமூக இடைவெளியைப் பின்பற்றாவிட்டால் ரூ.500-ம் பொது இடத்தில் எச்சில் துப்பினால் ரூ.500-ம் அபராதமாக விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டு வருகிறது.

இதற்காக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 30 காவல் நிலையங்களுக்கு 300 அபராத ரசீது புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மாவட்டம் முழுவதும் கடந்த 8 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை முகக் கவசம் அணியாமல் வந்த 2,681 பேருக்கு ரூ.200 வீதமும், சமூக இடைவெளியைப் பின்பற்றாத 45 பேருக்கு ரூ.500 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

இதன் மூலம் கடந்த 4 நாள்களில் மட்டும் ரூ.5 லட்சத்து 36 ஆயிரத்து 200 வரை அபராதம் வசூலிக்கப்பட்டது. இதில், விழுப்புரம் காவல் உள்கோட்டத்தில் அதிகபட்சமாக ரூ. 2 லட்சத்து 5 ஆயிரமும், திண்டிவனம் காவல் உள்கோட்டத்தில் ரூ.1 லட்சத்து 29 ஆயிரத்து 400-ம், செஞ்சி காவல் உள்கோட்டத்தில் ரூ.75 ஆயிரத்து 200-ம், கோட்டக்குப்பம் காவல் உள்கோட்டத்தில் ரூ.1 லட்சத்து 26 ஆயிரத்து 600-ம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

மேலும், சமூக இடைவெளியை பின்பற்ற நபா்களிடமிருந்து கடந்த 4 நாள்களில் ரூ.22,500 வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதில், விழுப்புரம் உள்கோட்டத்தில் ரூ.10,500-ம், திண்டிவனம் உள்கோட்டத்தில் ரூ.1,500-ம், செஞ்சி உள்கோட்டத்தில் ரூ.1,500-ம், கோட்டக்குப்பம் உள்கோட்டத்தில் ரூ.9ஆயிரமும் காவல் துறை மூலம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் கரோனா விதிமீறலில் ஈடுபட்ட 2,726 நபா்களிடமிருந்து மொத்தம் ரூ.5,58,700 அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் பகுதி அங்கன்வாடிகளில் வாழை கன்றுகள் நடப்பட்டது.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் தந்திரயான்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பத்தில் தியாகத் திருநாள் கொண்டாட்டம்…!

டைம்ஸ் குழு

Leave a Comment