33.2 C
கோட்டக்குப்பம்
August 12, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

பரகத் நகரின் பிரதான பகுதியில் மின் விளக்கு அமைத்து மக்களின் பல வருட கோரிக்கையை நிறைவேற்றிய கவுன்சிலர்.

பரகத் நகர் இணைக்கும் பிரதான சாலையான வாட்டர் டேங்க் மெயின் ரோட்டில், கடந்த பல வருடங்களாக முதல் நான்கு மின்கம்பங்களில் மின்விளக்கு இல்லாமல், அந்த பகுதி முழுவதும் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்பட்டு வந்தது. மேலும், இது சம்பந்தமாக கோட்டக்குப்பம் பேரூராட்சியாக இருக்கும் பொழுதே பலமுறை மின்விளக்கு அமைக்க கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இன்று 22-வது வார்டு கவுன்சிலர் Y. நாசர் அலி அவர்கள் தனது சொந்த செலவில் 4 மின் கம்பங்களுக்கு மின் விளக்கு பொருத்தியுள்ளார். இதனால், இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய நகர்மன்ற கவுன்சிலர் Y. நாசர் அலி அவர்களுக்கு அப்பகுதி மக்கள் நன்றியை தெரிவித்து வெகுவாக பாராட்டினர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோட்டக்குப்பம் நகராட்சி அலுவலகத்தை வேறு இடத்தில் கட்டுவதற்கு எதிர்ப்பு.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் மிஸ்வாக் சார்பாக 340 பயனாளிகளுக்கு பெருநாள் அன்பளிப்பு.

டைம்ஸ் குழு

சஹர் நேரங்களில் குடி தண்ணீர் வரவில்லை…

Leave a Comment