30.6 C
கோட்டக்குப்பம்
May 20, 2024
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

புதுப்பிக்கப்பட்ட பரகத் நகர் அங்கன்வாடி மக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு

புதுப்பிக்கப்பட்ட பரகத் நகர் பால்வாடி (குழந்தைகள் அங்கன்வாடி மையம்) மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.

கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட பரகத் நகர் பகுதியில் கடந்த 15 ஆண்டுகாலமாக குழந்தைகள் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது.

இந்த குழந்தைகள் மையத்தில் ஆண்டுக்கு முப்பதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆரம்பக் கல்வி கற்று வருகிறார்கள். மேலும் கர்ப்பிணிப் பெண்களுக்கு அந்தந்த காலகட்டத்திற்கு தேவையான தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

அதேபோன்று, பிறந்த குழந்தைகளுக்கான தடுப்பூசிகளும் போடப்பட்டு வருகிறது. அரசின் சிறப்பு முகாம்களின் மூலம் போடப்படும் கொரோனா தடுப்பூசி, போலியோ சொட்டு மருந்து போன்ற அனைத்து நிகழ்வுகளும் இந்த பால்வாடியில் நடைபெற்று வருகிறது.

நூற்றுக்கணக்கான தாய்மார்களும், கர்ப்பிணிகளும் பயன்படுத்திவரும் இந்த குழந்தைகள் மையம் அமைந்துள்ள இடம் சம தளத்தில் இல்லாமல் குண்டும் குழியுமாக இருந்து வந்தது. மேலும் கட்டிடம் தரை முழுவதும் பழுதடைந்து இருந்து வந்தது. மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி கட்டிடத்தின் உள்ளே செல்ல முடியாத அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தி வந்துள்ளது.

இதை அப்பகுதி மக்கள் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நகர்மன்ற உறுப்பினர் Y. நாசர் அலி அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றபோது, அவர் அந்த வார்டில் முதல் வேலையாக இந்த பாதையை சீரமைக்கும் பணியை மேற்கொண்டார். கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வந்த சீரமைக்கும் பணிகள் முடிவுற்று தற்போது மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இன்று திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நகர்மன்றத் தலைவர் S.S. ஜெயமூர்த்தி அவர்கள் தலைமை தாங்கி திறந்துவைத்தார்.

சிறப்பு அழைப்பாளர்களாக நகர்மன்றத் துணைத் தலைவர் ஜீனத் முபாரக், பரகத் நகர் பள்ளிவாசல் முத்தவல்லி பிலால் முஹம்மத், செயலாளர் அப்துல் நாசர், நகர்மன்ற உறுப்பினர்கள் ஜாகீர் உசேன், முஹம்மது பாரூக், வீரப்பன், சுகுமார், சண்முகம், ஜாமிஆ மஸ்ஜித் உறுப்பினர்கள் அமீர் பாஷா, ஹாஜாத் அலி, பரக்கத் நகர் ஜமாத்தார்கள் அப்துல் குத்தூஸ், அஸ்ரப் அலி, யஹ்யா, சேட்டு (எ) சர்புதீன், ஹபீப், கிவ்ஸ் சங்க நிர்வாகிகள் ரியாஸ், இலியாஸ், பயாஸ், திமுக பிரமுகர்கள் கமால், ஜாகிர் உசேன், மற்றும் பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டார்கள்.

மேலும் ஸ்மார்ட் டிவி(Smart TV), குழந்தைகள் நாற்காலி, புத்தகங்கள் மற்றும் அங்கன்வாடிக்கு தேவையான இதர பொருட்கள் Y. நாசர் அலி அவர்கள் வழங்கினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் த.மு.மு.க. நகர அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றம்.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் நகராட்சி அலுவலகத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் நகராட்சிக்கு 27 கவுன்சிலர்கள் நிர்ணயம்: அரசாணை வெளியீடு.

டைம்ஸ் குழு

Leave a Comment