29.6 C
கோட்டக்குப்பம்
May 13, 2024
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் மிஸ்வாக் சார்பாக 340 பயனாளிகளுக்கு பெருநாள் அன்பளிப்பு.

கோட்டக்குப்பம் மிஸ்வாக் அமைப்பின் சார்பாக கடந்த வருடங்களை போன்று இவ்வருடமும் நலிந்தோருக்கு பெருநாள் அன்பளிப்பு வழங்கப்பட்டது.

கோட்டக்குப்பம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 340 பயனாளிகளுக்கு பெருநாள் அன்பளிப்பாக 12 விதமான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு பை வழங்கப்பட்டது.

சென்ற ஆண்டைப் போன்று இவ்வருடமும் ரமலான் மாதம் கொரானா நெருக்கடியை சந்தித்து வருகிறது.

தற்பொழுது கொரானா நெருக்கடியின் காரணமாக தினக் கூலிகள், கூலித்தொழிலாளிகள், மாதாந்திர ஊதியம் பெறுவார்கள் வருமானம் இல்லாமல் மிகுந்த சிரமப்பட்டு வருகிறார்கள். கொரானா நெருக்கடி காலத்தில் பண்டிகை நாட்கள் வந்துவிட்டதால் மேற்சொன்னவர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். அவர்களின் சிரமத்தை முழுமையாக சரி செய்ய முடியாவிட்டாலும், பெருநாள் தினமாவது மகிழ்ச்சியுடன் இருக்கவேண்டும் என்ற காரணத்தில் அவர்களுக்கு இந்த உதவி செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

செல்வந்தர்களும் நடுத்தர வர்க்கத்தினரும் பெருநாள் பண்டிகையை கொண்டாடுவது போன்றே வருமானம் இன்றி தவிக்கும் ஏழைகளும் பெருநாள் அன்று சிறப்பாக கொண்டாட திருநாளில் சமைக்கத் தேவையான மளிகை பொருட்கள் சுமார் 500 ரூபாய் மதிப்பில் வழங்குவது என்று முடிவு செய்து அதன்படி பல நண்பர்கள் மற்றும் மிஸ்வாக் குழுவினர் வழங்கிய நன்கொடைகளைக் கொண்டு கொண்டும் 340 ஏழைகளுக்கு இந்த மளிகை தொகுப்பு பை வழங்கப்பட்டது.

தான்மட்டும் பெருநாள் கொண்டாடாமல் தன்னை சுற்றி இருக்கும் வருமானம் இன்றி தவிக்கும் ஏழைகளும் பெருநாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்ற நோக்கில் இந்தப் பணியை மேற்கொண்ட மிஸ்வாக்கின் முயற்சி மிகுந்த பாராட்டுக்குரியது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டகுப்பதில் நோன்பு பெருநாள் மிக உற்சாகக் கொண்டாட்டம் (படங்கள்)

கோட்டக்குப்பத்தில் தொடர் மின்வெட்டு சம்பந்தமாக மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மனு.

டைம்ஸ் குழு

புதுப்பிக்கப்பட்ட கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் ஷாதி மஹால்.

டைம்ஸ் குழு

Leave a Comment