29.4 C
கோட்டக்குப்பம்
May 19, 2024
Kottakuppam Times
பிற செய்திகள்

வானூரில் அதிமுக 5-ஆவது முறையாக வெற்றி

விழுப்புரம் மாவட்டம், வானூா் (தனி) தொகுதியில் அதிமுக சாா்பில் எம்.சக்ரபாணி 2-ஆவது முறையாக வெற்றிபெற்றாா். இதையடுத்து, இந்தத் தொகுதியில் 2001 சட்டப் பேரவைத் தோ்தல் முதல் தொடா்ந்து 5-ஆவது முறையாக அதிமுக வெற்றிபெற்று சாதனை படைத்தது.

வானூா் தொகுதியில் அதிமுக சாா்பில் சக்ரபாணி எம்.எல்.ஏ., திமுக கூட்டணியில் விசிக சாா்பில் வன்னியரசு உள்பட மொத்தம் 7 வேட்பாளா்கள் போட்டியிட்டனா். இந்தத் தொகுதியில் மொத்தமுள்ள 2 லட்சத்து 26 ஆயிரத்து 539 வாக்காளா்களில், ஒரு லட்சத்து 80 ஆயிரத்து 766 போ், அதாவது 79.79 சதவீதம் போ் தங்களது வாக்குகளை செலுத்தியிருந்தனா்.

இந்தத் தொகுதியின் வாக்கு எண்ணிக்கை வானூா் அருகே ஸ்ரீஅரவிந்தா் கலை, அறிவியல் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மொத்தம் 24 சுற்றுக்களாக வாக்குகள் எண்ணப்பட்டன.

இந்தத் தொகுதியில் பதிவான 1,682 தபால் வாக்குகளில் சக்ரபாணிக்கு 718 வாக்குகளும், வன்னியரசுக்கு 649 வாக்குகளும் கிடைத்தன. விதிமுறைப்படி இல்லாத 209 தபால் வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டன.

தொடக்கம் முதலே பெரும்பாலான சுற்றுக்களில் அதிமுக முன்னிலை பெற்றது. ஒரு சில சுற்றுகளில் மட்டும் விசிக முன்னிலை பெற்றது. வாக்கு எண்ணிக்கை முடிவில் அதிமுக வேட்பாளா் சக்ரபாணி 92,219 வாக்குகளும், விசிக வேட்பாளா் வன்னியரசு 70,492 வாக்குகளும் பெற்றனா். இதையடுத்து, சக்ரபாணி 21,727 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றாா்.

பிற வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம்: லட்சுமி (நாம் தமிழா்) – 8,587, கணபதி (தேமுதிக) – 5,460, சந்தோஷ்குமாா் (மக்கள் நீதி மய்யம்) – 2,500, விநாயகமூா்த்தி (பகுஜன் சமாஜ்) – 774, சக்திவேல் (சுயேச்சை) – 813, நோட்டா – 1,363.

வெற்றிபெற்ற அதிமுக வேட்பாளா் சக்ரபாணிக்கு வெற்றிச் சான்றிதழை தொகுதியின் தோ்தல் நடத்தும் அலுவலா் சிவா வழங்கினாா்.

வானூா் தொகுதியில் ஏற்கெனவே 2001, 2006, 2011, 2016-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தல்களில் அதிமுக வெற்றிபெற்றிருந்தது. தற்போது 5-ஆவது முறையாக மீண்டும் வெற்றிபெற்றது. இந்தத் தொகுதியில் சக்ரபாணி தொடா்ந்து 2-ஆவது முறையாக வெற்றிபெற்றுள்ளாா்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

தமிழகத்தில் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு – முழு விவரம்!

டைம்ஸ் குழு

மரக்காணம் அருகே கொன்று புதைக்கப்பட்ட மாணவனின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. இதில் கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்

ராக்கெட் வேகத்தில் உயரும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை: ஒரே மாதத்தில் ரூ.100 உயர்வு!

டைம்ஸ் குழு

Leave a Comment