31.6 C
கோட்டக்குப்பம்
May 18, 2024
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

சஹர் நேரங்களில் குடி தண்ணீர் வரவில்லை…

பொதுவாக நோன்பு காலங்களில், சஹர் நேரங்களில் கோட்டகுப்பம் பேரூராட்சி குடிதண்ணீர் விடுவது வழக்கம்.

ஆனால் இந்த வருடம், நோன்பு காலங்களில் பேரூராட்சி சார்பில் குடிதண்ணீர் திறந்து விடப்படவில்லை. இது தொடர்பாக பல அமைப்பினரும் மற்றும் பல நண்பர்களும் கோட்டகுப்பம் பேரூராட்சி செயல் அலுவலரிடம் முறையிட்டும், இதுவரை எந்த பயனும் இல்லை.

மேலும் 8 நோன்புகள் கடந்துவிட்டது. இதில் ஒன்று அல்லது இரண்டு முறை மட்டுமே சஹர் நேரங்களில் தண்ணீர் விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சஹர் நேரங்களில் குடி தண்ணீர் வராததால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகிறார்கள். ஆதலால் கோட்டகுப்பம் பேரூராட்சி இம்முறை மக்கள் நலனை கருத்தில் கொண்டு, குடி தண்ணீர் வருவதற்கு வழி வகை செய்ய வேண்டும் என்று கோட்டகுப்பம் டைம்ஸ் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் பெரிய தெரு தக்வா மஸ்ஜித் & பரகத் நகர் மஸ்ஜிதுல் பரகத் வல் மத்ரஸஹ் சார்பாக நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பத்தில் KVR மருத்துவ மையம் (புதிய மருத்துவமனை) இன்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அவர்கள் திறந்து வைத்தார்கள்.

கோட்டக்குப்பம் காந்தி ரோடு அடைப்பு. தமிழகத்தில் கடைபிடிக்கப்படும் தளர்வுகளற்ற முழு அடைப்பு கோட்டக்குப்பத்திலும்.

Leave a Comment