June 28, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் மிஸ்வாக் சார்பில் 420 பயனாளிகளுக்கு 15 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு பை வினியோகம்.

ஏழை எளியவரும் சிறப்பான முறையில் பெருநாளை கொண்டாடும் நோக்கத்தில் வருடா வருடம் மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு பை கோட்டக்குப்பம் மிஸ்வாக் சார்பில் வழங்கப்படும்.

அந்த வகையில், இந்த வருடமும் கோட்டக்குப்பம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மிஸ்வாக் சார்பாக 15 மளிகை பொருட்கள் – பாஸ்மதி, பொன்னி அரிசி, சர்க்கரை, எண்ணெய், கோதுமை, மைதா, ரவை, சேமியா, பட்ட, ஏலக்காய், கிராம்பு, பிரியாணி இலை, முந்திரி, திராட்சை, பிரியாணி மசாலா, கான் பிளார் மாவு, மஞ்சள் தூள், நெய், பிஸ்கட் பாக்கெட், துணி சோப்பு உள்ளடக்கிய 600 ரூபாய் மதிப்பில் தொகுப்பு பை சுமார் 420 குடும்பங்களுக்கு மேல் இன்று(08/04/2024) மாலை 3 மணி அளவில் வழங்கப்பட்டது.

நிகழ்வில் மிஸ்வாக் செயற்குழு உறுப்பினர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு மளிகை தொகுப்பு பையை வழங்கினர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் அணைக்குடியார் தெரு முன் பகுதியில் சைடு வாய்க்கால் அமைக்க கோரி நகர்மன்ற தலைவர் மற்றும் கவுன்சிலருக்கு மனு.

டைம்ஸ் குழு

தொடர் மின்வெட்டு எதிரொலி: கோட்டக்குப்பம் மின்வாரியம் எதிரில் தொலைக்காட்சி பெட்டிக்கு மாலை அணிவித்து முற்றுகை போராட்டம்.

டைம்ஸ் குழு

ஜாமிஆ மஸ்ஜித் 150-வது ஆண்டு முப்பெரும் விழா பகுதி – 1

Leave a Comment