29.4 C
கோட்டக்குப்பம்
May 19, 2024
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் நடைபெற்ற மாபெரும் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி.

‘கல்வி வழிகாட்டி 2022’ நிகழ்ச்சி, “கோட்டக்குப்பம் அஞ்சுமன் & கோட்டக்குப்பம் குவைத் ஜமாத்” சார்பில் நேற்று (26/06/2022) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதில், 600-க்கும் மேற்பட்ட மாணவ/மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று, உயர் கல்வியில் சேர்வதற்கான ஆலோசனை பெற்றனர்.

இந்நிகழ்ச்சியில் மூன்று அமர்வுகளாக பிரிக்கப்பட்டு, முதல் அமர்வில் Dr. ஷாஹின் சுல்தானா, பேராசிரியர் முனைவர் நா இளங்கோ மற்றும் Dr. S. I. ஹுமாயூன் அவர்களும் பாதுகாப்பு துறைகளில் உயர் கல்வி குறித்து மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கினார். இரண்டாவது அமர்வில் பேராசிரியர் முனைவர் முஹம்மது ரஃபீக் அவர்கள் ஆள்வினை இன்மை பழி என்ற தலைப்பில் உரையாற்றினார். மூன்றாவது அமர்வில் முகம்மது ரபிக் அவர்கள் உயர்கல்வி படிப்புகளும் மற்றும் வேலைவாய்ப்புகளும் குறித்து மாணவர்களிடம் கலந்துரையாடல் மூலம் எடுத்துரைத்தார்.

எதைப் படிக்க வேண்டும் என்பதை விட எதற்கு படிக்க வேண்டும் என்பதையும்,
வேலைவாய்ப்புக்கான படிப்புகள் எவை, எதிர்கால வாழ்வை பிரகாசமாக்கும் பாட பிரிவுகள் என்ன, உயர்கல்வி படிக்கும்போதே, வளர்க்க வேண்டிய திறன்கள், கல்லுாரிகளை தேர்வு செய்யும் முறை உள்ளிட்டவை குறித்து கல்வியாளர்கள் விளக்கமளித்தனர்.

மேலும், குறிப்பாக இதில் 127 மாணவ/மாணவியரின் தனிப்பட்ட தேவைகளுக்கேற்ப – துறை சார்ந்து வெற்றிகரமாகத் திகழும் உள்ளூர் மேனாள் மாணவர்கள் மூலம் சந்தேகங்கள் தனித்தனியாக நிவர்த்தி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சியின் முடிவில் கோட்டக்குப்பத்தை சார்ந்த பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ/மாணவிகளுக்கு சிறப்பிக்க பட்டனர். இதில், 12 ஆம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற முகமது யாசிர், இரண்டாவது மதிப்பெண் பெற்ற சாஹிரா பேகம் மற்றும் மூன்றாவது மதிப்பெண் பெற்ற துர்கா அவர்களுக்கு சிறப்பிக்க பட்டனர். அதேபோல், பத்தாம் வகுப்பில் முதல் மதிப்பெண் எடுத்த ஷயிலா அவர்களுக்கும், இரண்டாவது மதிப்பெண் பெற்ற முஹம்மத் நிஷால் அவர்களுக்கும் மற்றும் மூன்றாவது மதிப்பெண் பெற்ற சுபாஷ் அவர்களும் சிறப்பிக்கப் பட்டனர். மேலும், புதுச்சேரி மாவட்டத்தில் முதல் மதிப்பெண் பெற்ற ரிஷால் அக்தர் அவர்களும் கௌரவிக்கப்பட்டார்.

நிகழ்ச்சியினை அஞ்சுமன் நூலக பொது செயலாளர் லியாக்கத் அலி கலிமுல்லா அவர்கள் தொகுத்து வழங்கினார், Y. முஹம்மது அனஸ் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியில் குவைத் ஜமாத் இதுவரை செய்த செயல்பாடுகளை குறித்து ஜைனுதீன் விளக்கினார்.

இந்நிகழ்ச்சியினை அஞ்சுமன் நூலகம் மற்றும் கோட்டக்குப்பம் குவைத் ஜமாத் நிர்வாகிகள் இணைத்து ஏற்பாடு செய்திருந்தனர். இறுதியில் A.R. சாதிக் பாஷா அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் இப்ராஹிம் கார்டன் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கழிவுநீர் வடிகால் திட்டம் தொடங்கிவைப்பு.

டைம்ஸ் குழு

உலக தண்ணீர் தினம்: கோட்டக்குப்பத்தில் இந்தியன் ரெட் கிராஸ் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் ஐக்கிய ஜமாத் சார்பில் ஏழைகளுக்கான ஜகாத் பொருள் மற்றும் ரொக்கம் வழங்கப்பட்டது.

டைம்ஸ் குழு

Leave a Comment