30.6 C
கோட்டக்குப்பம்
May 20, 2024
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் இப்ராஹிம் கார்டன் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கழிவுநீர் வடிகால் திட்டம் தொடங்கிவைப்பு.

கோட்டக்குப்பம் பழைய பட்டணப்பாதை மற்றும் மகாத்மா காந்தி சாலையை இணைக்கும் பிரதான சாலையான கோட்டக்குப்பம் இப்ராஹிம் கார்டன் பகுதியில் நீண்ட காலமாக கழிவு நீர் வாய்க்கால் இல்லாததால் சாலைகளில் கழிவு நீர் தேக்கமாக காணப்பட்ட வந்தது. இதனால், அப்பகுதி வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள், பள்ளி மாணவர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் என அனைவரும் தேங்கி நிற்கும் கழிவு நீரால் பெரும் அவதிக்கு உள்ளாகி வந்தனர்.

இதற்கு நிரந்தர தீர்வு வேண்டி பலமுறை அப்பகுதி மக்களால் மனு அளிக்கப்பட்டு வந்தது. மேலும், அதிகாரிகளும் இது சம்பந்தமாக பலமுறை ஆய்வு செய்தனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும், மழை நீர் வடிகாளுடன் கூடிய தரை தள தொட்டி அமைக்கும் பணி இன்று(23/11/2023) துவங்கப்பட்டது. இதன் மூலம் கழிவு நீர் மற்றும் மழை நீர் தேங்காதவாறு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில், கோட்டக்குப்பம் நகர மன்ற தலைவர் S.S ஜெயமூர்த்தி, நகராட்சி ஆணையர் புகேந்திரி, 21-வது வார்டு நகர மன்ற உறுப்பினர் M. சைதானி முஹமது கவுஸ், நகர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பத்தில் தொற்றினால் இறந்தவர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

கோட்டக்குப்பதில் YMJ/KIET சார்பில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது.

டைம்ஸ் குழு

இன்ஸ்பெக்டரிடம் தி.மு.க. கவுன்சிலர்கள் புகார்

டைம்ஸ் குழு

Leave a Comment