29.6 C
கோட்டக்குப்பம்
March 21, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் மெர்குரி நண்பர்கள் சங்கம் சார்பில் 20-வது வார்டு பகுதி முழுவதும் கொசு மருந்து அடிக்க கோரிக்கை: உடனடி நடவடிக்கை எடுத்த ஆணையர்.

கோட்டக்குப்பம் மெர்குரி நண்பர்கள் சங்கம் சார்பில் பெருகி வரும் கொசுக்களை கட்டுப்படுத்த 20-வது வார்டு பகுதி முழுவதும் கொசு மருந்து அடிக்க ஆணையரிடம் இன்று(21/02/2024) மனு அளிக்கப்பட்டது.

அந்த மனுவில், “கோட்டக்குப்பம் நகராட்சி 20-வது வார்டுக்கு உட்பட்ட அணைக்குடியர் தெரு, ஹாஜி ஹுசைன் தெரு, ரஹ்மத் நகர் பள்ளிவாசல் தெரு, சிராஜ் மில்லத் வீதி – 1, 2, 3 ஆகிய பகுதிகளில் கொசுக்கள் தொல்லை அதிகமாக உள்ளதாகவும், இதனால் பல விதமான காய்ச்சலுக்கு குழந்தைகள் பெரியோர்கள் என அனைத்து தரப்பு மக்களும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள், எனவே 20-வது வார்டு முழுதும் கொசு மருந்து அடிக்க வேண்டுமாய் கோரப்பட்டது.

இதையடுத்து, கோட்டக்குப்பம் ஆணையர் அடுத்த சில மணி நேரங்களில் துரிதமாய் செயல்பட்டு நவீன ராட்சத கருவி மூலமாக அந்த பகுதி முழுவதும் கொசு மருந்து அடிக்கப்பட்டது. மனு அளித்த சில மணி நேரங்களில் துரிதமாக செயல்பட்ட ஆணையருக்கு மெர்குரி சங்கம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

வழக்கமான புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை, கோட்டக்குப்பம் பேரூராட்சி அறிவிப்பு.

கோட்டக்குப்பம் 17-வது வார்டில் சுதந்திர தின நிகழ்ச்சி

டைம்ஸ் குழு

உலக தண்ணீர் தினம்: கோட்டக்குப்பத்தில் இந்தியன் ரெட் கிராஸ் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி.

டைம்ஸ் குழு

Leave a Comment