April 16, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

ஈரான் உயர்மட்ட தலைவர் அயதுல்லா கமேனி படுகொலை – அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக கோட்டக்குப்பத்தில் த.மு.மு.க சார்பில் மெழுகுவர்த்தி ஏந்திய ஆர்ப்பாட்டம்!

ஈரான் நாட்டின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலியக் கூட்டுப் படைகள் நடத்திய தாக்குதலையும், அந்நாட்டின் உயர்மட்ட தலைவர் அயதுல்லா கமேனி படுகொலை செய்யப்பட்டதையும் கண்டித்து, கோட்டக்குப்பத்தில் இன்று இரவு உணர்ச்சிப்பூர்வமான அமைதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகள் இணைந்து வான்வழித் தாக்குதல்களை நடத்தின. இந்த பயங்கரவாதத் தாக்குதலில் ஈரானின் உயர்மட்ட தலைவர் அயதுல்லா கமேனி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் பலரும் கொல்லப்பட்டனர்.

இந்தத் தாக்குதலைக் கண்டித்து இந்தியா முழுவதும் இன்று (மார்ச் 1) பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்தன. காஷ்மீர் முதல் தமிழ்நாடு வரை பல்வேறு இடங்களில் ஈரானுக்கு ஆதரவாகவும், மறைந்த மதகுரு அயதுல்லா கமேனிக்கு இரங்கல் தெரிவித்தும் ஊர்வலங்கள் நடைபெற்றன. அதன் ஒரு பகுதியாகவே கோட்டக்குப்பத்திலும் இந்த அறப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசல் முன்பாக இன்று இரவு தராவிஹ் தொழுகை முடிந்தவுடன், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (த.மு.மு.க) சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்குத் தமுமுக நகரத் தலைவர் அபுதாஹிர் தலைமை தாங்கினார். பங்கேற்ற ஊர் ஜமாத்தார்கள் மற்றும் நிர்வாகிகள் கைகளில் மெழுகுவர்த்திகளை ஏந்தி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஏகாதிபத்தியப் போக்கைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் அஸ்கர் அலி, மற்றும் நகர நிர்வாகிகள் அஷ்ரப் அலி, ஜரீத், ஏகே பஷீர் அஹமது, டாக்டர் தாரிப் அலி, ஆஸ் (எ) ஆபிதீன், நூருல் அமீன், ஊர் ஜமாத்தார்கள் மற்றும் பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டு தங்கள் கண்டனங்களை பதிவு செய்தனர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

குவைத் வாழ் கோட்டகுப்பத்தினர் பெருநாள் சந்திப்பு (புகைப்படங்கள்)

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் பர்கத் நகர் பரிதாபங்கள்!

டைம்ஸ் குழு

தமிழகத்தில் துல்ஹஜ் பிறை தென்பட்டது: பக்ரீத் பெருநாள் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படும்.

டைம்ஸ் குழு

Leave a Comment