33.4 C
கோட்டக்குப்பம்
May 12, 2024
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் ஐம்பெரும் விழா நிகழ்ச்சி.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் கோட்டக்குப்பம் அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் பிரம்மாண்ட மாநில பேரமைப்பு கொடி ஏற்ற விழா, நலிந்த வியாபாரிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா, நான்காம் ஆண்டு துவக்க விழா, மாநில அளவில் பொறுப்பேற்ற சங்க தலைவருக்கு பாராட்டு விழா மற்றும் புதிய வியாபாரிகளுக்கு சான்றிதழ் வழங்கும் விழா ஆகியவை உள்ளடக்கிய ஐம்பெரும் விழாவாக நேற்று(30/01/2024) நடைபெற்றது.

விழாவிற்கு, சங்கத் தலைவர் A. அன்சர் பாஷா தலைமை தாங்கினார், செயலாளர் முகமது வக்கீல், பொருளாளர் கமல்ஹாசன் , இணைச் செயலாளர் சாகுல் ஹமீது வரவேற்புரை நிகழ்த்தினார். விழாவிற்கு, சங்கத்தின் உயர்மட்ட குழு நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில், மாநிலத் தலைவர் A. M. விக்கிரம ராஜா, சங்கத்தின் பிரம்மாண்ட மாநில கொடியேற்றி சிறப்புரையாற்றினார். மாவட்ட தலைவர் ராமகிருஷ்ணன்
வாழ்த்துரை வழங்கினார். புதுச்சேரி வணிகர் கூட்டமைப்பின் தலைவர் பாபு சிறப்புரையாற்றினார்.

நிகழ்விற்கு முன்பதாக, கோட்டக்குப்பத்தில் நீண்ட காலமாக ஆட்டுப்பட்டி கூடம் அமைக்காமல் உள்ளதை தொடர்ந்து மாநிலத் தலைவர் நேரடியாக சென்று நகராட்சி ஆணையரிடம் கோரிக்கை மனுவினை கொடுத்து அதற்கான ஆயத்தப் பணிகளை செய்து தர வலியுறுத்தினார்.

மேலும், சங்கத்தில் அங்கம் வகிக்கும் நலிந்த வியாபாரிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள். விழாவில் நகர தலைவர் அன்சர் பாஷா அவர்கள் மாநில அளவில் மாநில இணைச் செயலாளராக பொறுப்பேற்றதற்கான பாராட்டு விழா நடைபெற்றது. புதிதாக இணைந்த உறுப்பினர்களுக்கு சங்க சான்றிதழும், பரிசு தொகுப்பும் வழங்கி வரவேற்கப்பட்டது. விழா முடிவில் சங்க துணைத் தலைவர் ஹலில் பாய்ஸ் நன்றியுரை கூறினார்.

நிகழ்ச்சியில் அனைத்து வியாபாரிகள், ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் பாரம்பரிய கண்காட்சி வீடியோ தொகுப்பு.. அனைவரும் பார்க்க வேண்டிய வீடியோ கோப்பு..

ஜாமிஆ மஸ்ஜித் 150-வது ஆண்டு முப்பெரும் விழா பகுதி – 2

கோட்டக்குப்பத்தில் இந்திய கூட்டணி சார்பில் பானை சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பு.

டைம்ஸ் குழு

Leave a Comment