28.2 C
கோட்டக்குப்பம்
May 13, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் கிழக்கு கடற்கரை சாலையில் தரை வழி மின் கேபிள் & விளக்குகள் அமைப்பு.

கோட்டக்குப்பம் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் நீண்ட நாள் கோரிக்கையான கிழக்கு கடற்கரை சாலை சின்ன கோட்டக்குப்பம் சந்திப்பு முதல் கோட்டக்குப்பம் 555 வரையிலான சாலை நடுவில் நிறுவப்பட்டுள்ள மின் விளக்குகள் சரி வர எரிவதில்லை என்ற கோரிக்கையினை ஏற்று,

நகராட்சி சார்பில் ₹.17.30 லட்சம் செலவில் தரை வழி மின் கேபிள் மற்றும் விளக்குகள் அமைக்கப்பட்டு,

அதன் துவக்க விழா இன்று கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நகர் மன்ற தலைவர் எஸ்.எஸ்.ஜெயமூர்த்தி அவர்கள் கலந்து கொண்டு மின் விளக்கினை இயக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் நகர மன்ற துணை தலைவர் ஜீனத் பீ முபாரக், நகராட்சி ஆணையர் திரு.மங்கையர்கரசன், நகர் மன்ற உறுப்பினர்கள் , நகராட்சி மேலாளர் ( பொ ) அண்ணாமலை, நகராட்சி பொறியாளர்கள், மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

முஸ்லிம் லீக்கின் தீர்மானங்கள் கோட்டக்குப்பம் செயல் அலுவலரிடம் வழங்கப்பட்டது.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பத்தில் ஆர்ப்பரிக்கும் லைலத்துல் கத்ர் இரவு. (புகைப்படங்கள்)

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் அஞ்சுமன் நூலகம் சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி

டைம்ஸ் குழு

Leave a Comment