30.6 C
கோட்டக்குப்பம்
May 20, 2024
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோட்டக்குப்பம் கிளையின் தெருமுனை கூட்டம்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக பித்அத் ஒழிப்பு மற்றும் சமுதாய பாதுக்காப்பு மாநில மாநாடு வருகின்ற பிப்ரவரி 05, 2023 அன்று திருச்சியில் நடைபெற்றிருக்கிறது. அதை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக தெருமுனை கூட்டம் கடந்த 16-10-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 06-45 மணி முதல் இரவு 9:30 மணி வரை கோட்டக்குப்பம், ஆசாத் தெருவில் நடைபெற்றது.

இதில் சகோதரி முஹாஜிர் அவர்கள் குழந்தை வளர்ப்பு என்ற தலைப்பிலும், சகோதரி ஜைனப் அவர்கள் பெண்களின் கடமைகள் என்ற தலைப்பிலும் மற்றும் சகோதரர் பா.அப்துல் ரஹ்மான் மாநில பேச்சாளர் அவர்கள் பித்அத் ஒழிப்பு மாநாடு ஏன்? என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.

இதில் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர் சிறுமிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர் மற்றும் 8 முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டனர்.

தீர்மானங்கள் விபரம் கீழ்வருமாறு.

தீர்மானம் 1: ஹிஜாப் தடை
கர்நாடகாவில் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என்று கர்நாடக மாநிலம் உத்தரவு பிறப்பித்து அதன் விளைவாக நடைபெற்ற போராட்டங்கள் தேசத்தையும் தாண்டி பாரெங்கும் எதிரொலித்தது. கர்நாடகா உயர்நீதிமன்றம் ஹிஜாப் அணிவது இஸ்லாத்தின் அடிப்படை இல்லை என்று தீர்ப்பை சொல்லி பள்ளிக்கூடங்களுக்கு ஹிஜாப் அணிந்து செல்வதை தடை செய்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் கடந்த 13.10.2022 அன்று இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு வழங்கிய தீர்ப்பில் ஒருவர் ஹிஜாப் அணிய அனுமதிக்க வேண்டும் என்றும் மற்றொருவர் ஹிஜாப் அணிய விதித்த தடை சரிதான் என்றும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கி உள்ளனர், எனவே இவ்வழக்கு கூடுதல் பெஞ்சுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

பாபர் மசூதி வழக்கு கடந்து வந்த பாதையை இந்நிகழ்வு நினைவுபடுத்துகிறது. அதில் முஸ்லிம்களுக்கு அநீதியும் ஏமாற்றமுமே மிஞ்சியது. அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்திருக்கும் ஹிஜாப் விவகாரத்தின் தீர்ப்பிலாவது நியாயம் மற்றும் அரசியல் சாசனத்தின் அடிப்படையில் தீர்ப்பளிக்கப்பட வேண்டும் என இந்தக்கூட்டத்தில் வாயிலாக கேட்டுக் கொள்கிறோம்

தீர்மானம் 2: ஹிந்தி திணிப்பு கூடாது
உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமை வகிக்கும் ஆட்சி மொழிக்கான பாராளுமன்ற குழு சமீபத்தில் ஜனாதிபதி அவர்களிடம் தாக்கல் செய்துள்ள அறிக்கை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது , மத்திய அரசால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களான AIIMS ,IIT, IIM போன்ற கல்வி நிறுவனங்களில் மருத்துவம், பொறியியல் , மேலாண்மை படிப்புகளை படிக்கும் மாணவர்கள் இனிமேல் ஆங்கிலத்திற்கு பதிலாக ஹிந்தி மொழியில் படிக்க வேண்டும் எனவும் அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் ஒன்றிய அரசால் கூறப்பட்டுள்ளது.


நூற்றுக்கணக்கான மொழி பேசுபவர்கள் உள்ள இந்த நாட்டில் ஒரு சிலரின் தாய்மொழியான ஹிந்தியை மட்டும் கல்விக்கும் வேலைவாய்ப்புக்குமான மொழியாக அறிவிப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பிற மொழி பேசும் மக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றும் அபாயம் இதில் உள்ளது. அரசியலமைப்புச்சட்டம் சொல்லியுள்ள சம்வாய்ப்புகளை குலைக்கும் இந்த அத்துமீறலை இக்கூட்டத்தின் வாயிலாக வன்மையாக கண்டிக்கிறோம்..

தீர்மானம் 3: RSS தடை, வலிமையான ஜனநாயக போராட்டம்
இந்திய நாட்டை ஆளும் பாசிச பாஜக அரசு முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறைகளை தொடர்ந்து கட்டவிழ்த்து வருகிறது. பசுவின் பெயராலும், மதத்தின் பெயராலும் முஸ்லிம்கள் கொல்லப்படுகிறார்கள். பொது இடங்களில் பல்வேறு காரணங்களை சொல்லி தாக்கப்படுகிறார்கள், பலர் சிறைச்சாலையில் தள்ளப்படுகின்றனர். மாணவர்கள் மீது கூட கடுமையான வழக்கு பதியப்படுகிறது. முஸ்லீம் பெண்கள் (APP)அப்ளிகேஷன்கள் மூலம் மானபங்கம் செய்யப்படுகின்றனர். இதற்கு பிண்ணனியில் உள்ள சங்க பரிவாரங்கள் தடைசெய்யப்பட வேண்டும்

மேலும், ஹிஜாப் அணிய தடை, ஹலால் இறைச்சி தடை, ஒலிப்பெருக்கியில் பாங்கு சொல்ல தடை, போராட்டம் நடத்தினால் புல்டோசர் மூலம் வீடுகளை இடிப்பது என்று அரசே நடத்தும் அத்து மீறல்களால் சொல்லில் அடங்கா துயரங்களை சுமந்துக் கொண்டு பெரும்பான்மையான முஸ்லிம்கள் இந்தியாவில் இன்று வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். முத்தலாக் தடை சட்டம், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து 370 ஐ நீக்கியது, NIA விற்கு சிறப்பு அதிகாரங்கள், பொது சிவில் சட்ட வரைவு என்று முஸ்லிம்களை ஒடுக்கும் அனைத்து விஷயங்களையும் பாசிச பாஜக அரசு முன்னெடுத்து வருகிறது. சர்வாதிகாரம் வளர்ந்து வருகிறது. ஜனநாயகம் படு குழியில் தள்ளப்படுகிறது. மத சார்பற்ற இந்தியாவின் சுதந்திரத்திற்காக வெள்ளையரை எதிர்த்து முஸ்லீகள் நடத்திய நீண்ட நெடிய போராட்டத்தை ஆளும் ஒன்றிய அரசிற்கு நினைவுபடுத்த விரும்புகிறோம். இத்தகைய அடக்கு முறைகள் தொடர்ந்தால் நாடு மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்திற்கு தயாராகும் என்பதை ஆளும் ஒன்றிய அரசிற்கு எச்சரிக்கையாக சொல்லிக் கொள்கிறோம்.

தீர்மானம் 4: முஸ்லீம் சிறை வாசிகள் விடுதலை
தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கடந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள முஸ்லீம் சிறை வாசிகளை விடுதலை செய்வேன் என்று வாக்குறுதி அளித்தார். அறிஞர் அண்ணாவின் 113 வது பிறந்தநாளை முன்னிட்டு நீண்ட காலம் சிறையில் வாடும் 700 ஆயுள் தண்டனை கைதிகள் மனிதநேய அடிப்படையில் விடுதலை செய்யப்படுவார்கள் என்று அறிவித்து வந்த அரசானையில் முஸ்லிம்கள் விடுதலை கேள்விக்குறி ஆனதை தொடர்ந்து. நீதிபதி ஆதிநாதன் தலைமையில் காலம் நிர்ணயிக்க படாமல் கமிஷன் ஒன்று அமைக்கப்பட்டது. முஸ்லீம் சமுதாயம் நீதிபதி ஆதிநாதன் கமிஷணை எதிர்பார்த்து காத்து கிடக்கிறது. நீதிபதி ஆதிநாதன் அவர்களின் அறிக்கையிலும் முஸ்லீம்கள் விடுதலையில் மத ரீதியான பாரபட்சம் தொடர்ந்தால், தமிழகமே கண்டிராத மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முன்னின்று நடத்தும் என்பதனை இக்கூட்டத்தின் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறோம்.

தீர்மானம் 5: தமிழகத்தில் இட ஒதுக்கீடு
கடந்த ஆட்சி காலத்தில் தேர்தல் பிரச்சாரத்தின்போது முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட 3.5 சதவீத இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்தி வழங்குவேன் என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாக்களித்தார். அவர் வாழும் காலம் வரை அதற்கான எந்த முன்னெடுப்பையும் அவர் செய்யவில்லை. அவரின் மறைவிற்கு பிறகு அதிமுகவினர் பாஜகவின் அடிமைகளாக மாறிவிட்டனர். சிறுபான்மையினரான முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை நீண்ட காலமாகவே தமிழக அரசு நிறைவேற்றாமல் இருந்து வருகிறது. கடந்த சட்டமன்ற தேர்தலில் சிறுபான்மை சமுதாயத்தின் மொத்த வாக்குகளையும் பெற்று ஆட்சி பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 3.5% இட ஒதுக்கீட்டை 7 % ஆக அதிகரித்து முஸ்லிம்களுக்கு அளிக்க வேண்டும் என்று இக்கூட்டத்தின் வாயிலாக கேட்டுக் கொள்கிறோம்.

தீர்மானம் 6:
கோட்டக்குப்பம் நகராட்சியில் சமீப காலமாக அறிவிக்கப்படாத மின் வெட்டு தொடச்சியாக நடந்து கொண்டு இருக்கிறது. இதனால் மாணவர்களும் பொதுமக்களும் அதிகம் சிரமம்படுகிறார்கள், இதனை சரி செய்யாமல் அலட்சியமாக செயல்படும் கோட்டக்குப்பம் மின் வாரியத்திற்கு இக்கூட்டத்தின் வாயிலாக கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம். இதேபோல் தொடருந்து நடக்குமானால் கோட்டக்குப்பம் மின் வாரியத்தை முற்றுகை இடும் போராட்டத்தை அறிவிக்க நேரும் என்பதை தெரிவித்து கொள்கிறோம் .

தீர்மானம் 7:
கோட்டகுப்பதில் பல தெருக்களில் ரோடுகள் மிக மோசமாக உள்ளது குறிப்பாக உமறுப்புலவர் தெரு, எம்.எல் தெரு மற்றும் பல தெருக்கள் உள்ளது. ஆகவே இதுதெருக்களை உடனடியாக சீரமைத்துத்தருமாறு கோட்டக்குப்பம் நகராட்சியை இக்கூட்டத்தின் வாயிலாக கேட்டு கொள்கிறோம்.

தீர்மானம் 8:
கோட்டக்குப்பம் நகராட்சியில் பல தெருக்களில் சரியாக குடிநீர் விநியோகம் இல்லை என்று பொது மக்கள் பல முறை நகராட்சியில் புகார் செய்து சரியான தீர்வு இன்னும் எட்டப்படவில்லை இதை நகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படியில் சரி செய்ய வேண்டுமென இக்கூட்டத்தின் வாயிலாக கேட்டு கொள்கிறோம்.

தீர்மானம் 9: பித்அத் ஒழிப்பு மாநாடு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்ற இந்த பேரியக்கம் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக முஸ்லிம்களிடத்தில் நிலவும் மார்க்கத்திற்கு முரனான காரியங்களையும், மூட பழக்க வழக்கங்களையும் கலைவதற்கான வீரியமான பிரச்சரத்தை முன்னேடுத்து செயல்பட்டு வருகிறது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் இப்ராஹிம் கார்டன் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கழிவுநீர் வடிகால் திட்டம் தொடங்கிவைப்பு.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் ஈகைப் பெருநாள் தொழுகை நேரம் அறிவிப்பு.

டைம்ஸ் குழு

145 கிமீ வேகம்.. இன்று இரவு கரையை கடக்கிறது நிவர் புயல்..புதுச்சேரி துறைமுகத்தில் 10 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

Leave a Comment