34.8 C
கோட்டக்குப்பம்
August 12, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பதில் நாளை மூன்றாவது மெகா கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

கோட்டக்குப்பதில் நாளை(26-09-2021) கொரோனா மெகா தடுப்பூசி(கோவிஷீல்டு) முகாம் 5 மையங்களில் காலை 8 மணி முதல் கோட்டக்குப்பம் பொதுசுகாதாரத் துறை சார்பில், அனைத்து நபா்களும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் வகையில் கீழ்க்கண்ட இடங்களில் முகாம் நடைபெறவுள்ளது.

  1. அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி, கோட்டக்குப்பம்.
  2. சல்மான் மஸ்ஜித், பஜார் தெரு, கோட்டக்குப்பம்.
  3. அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தந்தராயன்குப்பம்.
  4. சிவன் கோயில், சின்ன கோட்டக்குப்பம்.
  5. அரசு நடுநிலை பள்ளி, ஐயனார் கோவில், பெரிய முதலியார் சாவடி.

முதல் டோஸ்(கோவிஷீல்ட்) எடுத்துக்கொண்டு 84 நாட்களுக்கு மேல் இருப்பவர்களுக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.

ஆகையால், பொதுமக்கள் இந்த சிறப்பு தடுப்பூசி முகமை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தடுப்பூசி செலுத்த வரும்பொழுது, தங்களது ஆதார் அட்டையை எடுத்து வரும்படி கேட்டுக்கொள்கிறோம்.

வெளிநாடுகளுக்கு செல்ல கூடியவர்கள், பாஸ்போர்ட் எடுத்து வந்து பதிந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும் சந்தேகங்கள் மற்றும் விபரங்களுக்கு:
திரு. ரவி,
9486476433
சுகாதார ஆய்வாளர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் பகுதியில் கனமழை பொழிந்து வரும் நிலையில், பல்வேறு இடங்களில் தேங்கியுள்ள மழை நீரை அப்புறப்படுத்தும் பணி தீவிரம்.

டைம்ஸ் குழு

பரகத் நகர் அல் மஸ்ஜிதுல் முபாரக் மதரஸா பள்ளிவாசல் உதவியுடன் இலவச கொரோனா தடுப்பூசி முகாம்.

டைம்ஸ் குழு

ஜாமிஆ மஸ்ஜித் ஹாபிழ் மௌலவி S.A. புகாரி மௌலானா அன்வாரி அவர்களின் சதகத்துல் பித்ர் விளக்கம்.

Leave a Comment