30.6 C
கோட்டக்குப்பம்
May 20, 2024
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பதில் சீரான மின் வினியோகம் கோரி மின்வாரியத்துக்கு இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கோரிக்கை மனு!

சமீபகாலமாக கோட்டக்குப்பம் பகுதியில் தொடர்ச்சியாக அடிக்கடி மின்தடையும் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்களும், இணைய வழி கல்வி கற்கும் மாணவ/மாணவிகளும், வியாபார பெருமக்களும், தொழில் கூடங்களும், மருத்துவமனைகளும் பெரிதும் பாதிக்கப்படுகிறது.

இவ்வாறு அடிக்கடி ஏற்படும் மின்தடையை ஒழுங்குபடுத்தி சரியான மின் வினியோகம் வழங்க வேண்டும், மேலும் கோட்டக்குப்பத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு பொருத்தப்பட்ட பழைய மின் கம்பிகளை, மின்சார தளவாட பொருட்களை அகற்றி விட்டு, புதிய மின் கம்பிகளை பெறுத்தி பழுதுபட்ட மின்கம்பங்களை மாற்றி அமைக்க வேண்டும், மின்னழுத்தம் சீராக இல்லாத பகுதிகளில் புதிய மின் மாற்றி அமைக்க கோரியும், மேலும் மின் தடைக்கு பெரிதும் காரணமாக கருதப்படும் துணை மின் நிலையம் அமைக்க வேண்டி வலியுறுத்தியும் இன்று கோட்டக்குப்பம் மின்சார வாரிய அலுவலகத்தில் இளநிலை மின் பொறியாளர் அவர்களிடம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக விழுப்புரம் மாவட்ட தலைவர் வி. ஆர். முஹம்மது இப்ராஹிம் தலைமையில் மனு வழங்கப்பட்டது.

வழங்கப்பட்ட மனுவை பெற்றுக்கொண்டு அதில் கூறப்பட்டிருந்த கோரிக்கைகளை ஏற்று, இந்த குறைகளை நிவர்த்தி செய்வதற்கு நாங்கள் தொடர்ந்து பணியாற்றிக்கொண்டிருக்கிறோம். இன்னும் சில வாரங்களில் இந்த குறைகள் முழுமையாக அகற்றப்படும் என்றும் உறுதி அளித்தார்கள்.

இந்த நிகழ்வில் விழுப்புரம் மாவட்ட துணை செயலாளர் அமீர் பாஷா, விழுப்புரம் மாவட்ட இளைஞர் அணி தலைவர் பிலால் முகமது, நகர துணை செயலாளர் ரஹ்மத்துல்லாஹ், விழுப்புரம் மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் சுலைமான், நகர இளைஞரணி தலைவர் அமீன், நகர துணைத் தலைவர் அலி அகமது, விழுப்புரம் மாவட்ட எம் எஸ் எஃப் பொறுப்பாளர்கள் முஹம்மது அலி, முஹம்மதுஉசைன், நகர எம்எஸ் எஃப் பொறுப்பாளர்கள் ஹாஜாத் அலி, சேட்டு, முகமது காலித், நகர இளைஞரணி அப்பாஸ், திமுக 8-வது வார்டு கிளை செயலாளர் பாபு மற்றும் ரஹ்மானியா பள்ளிவாசல் முத்தவல்லி அஷ்ரப் அலி ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

பரகத் நகர் அல் மஸ்ஜிதுல் முபாரக் மதரஸா பள்ளிவாசல் உதவியுடன் இலவச கொரோனா தடுப்பூசி முகாம்.

டைம்ஸ் குழு

சின்ன கோட்டக்குப்பம் அங்கன்வாடி குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தை அதிகரிக்கும் நவதானியங்கள் வழங்கப்பட்டது.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பத்தில் மதநல்லிணக்கம் – மனிதநேயம் மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தி சமூக நல்லிணக்க மனித சங்கிலி.

டைம்ஸ் குழு

Leave a Comment