28.6 C
கோட்டக்குப்பம்
May 21, 2024
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

முஸ்லிம் லீக்கின் தீர்மானங்கள் கோட்டக்குப்பம் செயல் அலுவலரிடம் வழங்கப்பட்டது.

நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ள கோட்டக்குப்பத்தில் அடிப்படைத் தேவைகளான மகப்பேறு மருத்துவமனை, தீயணைப்பு நிலையம், துணை மின் நிலையம், சுத்திகரிக்கப்பட்ட சீரான குடிநீர் வினியோகம், பத்திரப்பதிவு அலுவலகம், பாதாள சாக்கடை திட்டம் போன்ற வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் என்று கடந்த 12- 9 -2021 அன்று விழுப்புரத்தில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் விழுப்புரம் மாவட்ட பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அந்த தீர்மானங்கள் அனைத்து நாளிதழ்களிலும் செய்தியாக வெளியிடப்பட்டிருந்தது. இந்த தீர்மான நகலையும் செய்தித்தாள்களில் பிரசுரிக்கப்பட்ட நகல்களையும் கோட்டக்குப்பத்திற்கு தேவையான சில அடிப்படை கோரிக்கைகளை தொகுத்து மனுவாக புதிதாக பொறுப்பேற்ற இருக்கும் கோட்டக்குப்பம் செயல் அலுவலர் அவர்களை சந்தித்து மனு கொடுக்கப்பட்டது.

முன்னதாகவே புதிதாக கோட்டக்குப்பம் பேரூராட்சியில் செயல் அலுவலராக பொறுப்பேற்றுள்ள செயல் அலுவலர் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து மாவட்டத் தலைவர் வி. ஆர். முஹம்மது இப்ராஹிம், மாவட்ட துணை செயலாளர் அமீர் பாஷா, மாவட்ட இளைஞரணி தலைவர் பிலால் முஹம்மத், நகர செயலாளர் முகமது பாரூக் ஆகியோர் முன்னிலையில் பொன்னாடை போற்றி வரவேற்கப்பட்டது.

இந்த சந்திப்பில் கோட்டக்குப்பம் கிழக்குப் பகுதியான வேங்கை தெரு, உமறுப்புலவர் தெரு, மாமுலப்பை தெரு, பெரிய தெரு, காஜியார் வீதி, தைக்கால் தெரு, நாட்டாண்மை தெரு, மோர் சார் தெரு. ஹாஜி உசேன் தெரு, பட்டினத்தார் தெரு, உள்ளிட்ட பல பகுதிகளில் குடிநீர் வினியோகம் சீராக இல்லாததையும், குடிநீர் சுவையாக இல்லாததையும் சுட்டிக் காட்டப்பட்டது.

மேலும் சில இடங்களில் தினசரி குப்பைகள் அகற்றப்படாமல் இருப்பதையும் சுட்டிக் காட்டப்பட்டது. இந்த கோரிக்கைகள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டு ஆவணம் செய்வதாக உறுதி அளித்து உள்ளார்கள்.

இந்த சந்திப்பில் மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் சுலைமான், நகர இளைஞரணி தலைவர் அமீன் செயலாளர் தீன், MSF மாவட்ட பொறுப்பாளர்கள் முகமது ரபிக், முகமது அலி, முகமது உசேன், நகரத் தொழிலாளர் அணி நூருல் அமீன், நகர MSF பொறுப்பாளர்கள் ஆசாத், காலித், இளைஞரணி அப்பாஸ், முகமது யூனுஸ் அஸ்ரப் அலி ஆகியோர் உடன் இருந்தார்கள்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் சுகாதாரத்துறையின் முக்கிய அறிவிப்பு.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பத்தில் ஈகைத் திருநாள் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்.

டைம்ஸ் குழு

வழக்கமான புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை, கோட்டக்குப்பம் பேரூராட்சி அறிவிப்பு.

Leave a Comment