29.9 C
கோட்டக்குப்பம்
May 19, 2024
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

முழு ஊரடங்கு… பொருட்கள் வாங்க குவிந்த மக்கள்.

தமிழகத்தில் திங்கட்கிழமை முதல் முழு ஊரடங்கு கடைபிடிக்கும் என்று அரசு அறிவித்துள்ளது.

அதன்படி இன்று ஞாயிற்றுக்கிழமை வீடுகளுக்குத் தேவையான பொருட்கள் வாங்க கடைத்தெருவில் மக்கள் குவிந்தனர்.

கோட்டகுப்பத்தில் உள்ள அனைத்து மளிகை கடைகளிலும், காய்கறி கடைகளிலும், இறைச்சிக் கடைகளிலும், வரும் நாட்களுக்குத் தேவையான பொருட்களை வாங்க மக்கள் பெருமளவில் இந்த கடைகளில் குவிந்தார்கள்.

சமூக இடைவெளிவிட்டு நிற்குமாறு கடைக்காரர்களும் காவல்துறையினரும் அறிவுறுத்திய நிலையில் அதை காதில் வாங்காமல் கூட்டம் கூட்டமாக நின்று மக்கள் பொருட்களை வாங்க ஆர்வம் காட்டினர்.

இதனால் நுகர்வோருக்கு பொருட்களை வழங்க முடியாமல் வியாபாரிகள் திணறினர்.

ஒரு கட்டத்தில் பொருட்களை கொடுக்க முடியாமல் கடைகளின் கதவுகளை மூடிக் கொண்டனர். பிறகு ஒவ்வொருவராக வரிசையில் வந்து வாங்குமாறு அறிவுறுத்திய பிறகு பொதுமக்களுக்கு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன.

இதனால் கோட்டகுப்பம் காந்தி ரோடு மற்றும் கடைத்தெரு பகுதிகள் பெரும் கூட்டமாகவும் பரபரப்பாகவும் காணப்படுகிறது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் உள்ளாட்சித் தேர்தல்: வார்டு வாரியாக வாக்கு எண்ணிக்கை முழு விவரங்கள்.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பதில் நாளை மூன்றாவது மெகா கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

டைம்ஸ் குழு

நடுக்குப்பத்தில் தூண்டில் வளைவு அமைக்க கோரி மீனவர்கள் சாலை மறியல்.

டைம்ஸ் குழு

Leave a Comment