August 12, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் பேரூராட்சி ஊழியர்களை கண்டித்து வியாபாரிகள் பேரூராட்சியை முற்றுகை!

கோட்டக்குப்பம் பேரூராட்சி ஊழியர்களை கண்டித்து வியாபாரிகள் பேரூராட்சியை முற்றுகை!

இது சம்மந்தமாக வியாபாரிகள் தெரிவித்ததாவது,

“கோட்டக்குப்பத்தில் பிளாஸ்டிக் கேரி பேக் பொருட்களை பறிமுதல் செய்கிறோம் என்ற பெயரில் பேரூராட்சியின் அராஜக மற்றும் அத்துமீறல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதனைக் கண்டிக்கும் வகையில் வியாபாரிகள் அனைவரும் ஒன்றிணைந்து பேரூராட்சி செயல் அலுவலர் அவர்களை முற்றுகையிட்டோம்.

அது சமயம் இதற்கு மாற்று ஏற்பாடு செய்ய வலியுறுத்தியும் பேரூராட்சி ஊழியர்களின் அத்துமீறலை தடுக்கவும் வலியுறுத்தப்பட்டது. நாளை அதற்குண்டான அலுவலக அதிகாரிகளை வரவழைத்து தீர்வு காணப்படும் என செயல் அலுவலர் உத்தரவாதம் அளித்துள்ளார். தவறும் பட்சத்தில் வியாபாரிகள் அனைவரும் மீண்டும் கோட்டக்குப்பம் பேரூராட்சியை முற்றுகை இடுவோம் என தெரிவித்தனர்.”

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு மொத்தம் 161 பேர் வேட்புமனு தாக்கல்.

டைம்ஸ் குழு

கோட்டகுப்பம் தீனியாத் மக்தப் மதரஸா மாணவர் திறனாய்வு போட்டி..

நடுக்குப்பத்தில் விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட மீனவர் பிரதிநிதிகளிடம் ரவிக்குமார் எம்.பி‌ தலைமையில்‌ கருத்து கேட்பு.

டைம்ஸ் குழு

Leave a Comment