August 12, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

கோட்டகுப்பம் தீனியாத் மக்தப் மதரஸா மாணவர் திறனாய்வு போட்டி..

அன்வாருஸ் ஷுஃப்பா நிறுவனத்தின் மேற்பார்வையில் தமிழகத்தில் 2500க்கும் மேற்பட்ட தீனியாத் மக்தப் மதரஸா சிறப்புடன் நடைபெற்று வருகிறது.

அதன்படி கோட்டகுப்பம் பகுதியில் 13 தீனியாத் மக்தப் மதரஸாக்கள் சிறப்புடன் நடைபெற்று வருகிறது.

இந்த மதரஸா மாணவர்களின் கல்வி அறிவை அரியும் பொருட்டு மாணவ மாணவியருக்கிடையே திறனாய்வு போட்டி வரும் 29.09.2018 சனிக்கிழமை மதியம் 2 மணிமுதல் இஷா வரை கோட்டகுப்பம் ஜாமிஆ மஸ்ஜித் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.

இந்நிகழ்வில் கோட்டகுப்பம், சோலை நகர் பகுதி மதரஸாவில் இருந்து சிறந்த மாணவர்களாக சுமார் 60 மாணவ மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கிடையே

1) குர்ஆன் பார்த்து ஓதுதல்
2) கிராஅத்
3) பாங்கு
4) பயான்
5) தீனியாத் பாடங்கள்

ஆகிய ஐந்து தலைப்பில் திறனாய்வு போட்டி நடைபெற உள்ளது (இன்ஷா அல்லாஹ்)
இந்நிகழ்வில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அழைக்கிறார்கள் கோட்டகுப்பம் அனைத்து தீனியாத் மக்தப் மேம்பாட்டு குழுவினர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

மரக்காணம் அருகே நள்ளிரவில் கரையை கடக்கும் நிவர் புயல்! முழுவதும் கடக்க நாளை காலை 10 மணியாகும்!

கோட்டக்குப்பம் இந்தியன் வங்கியில் தொழில்நுட்பக் கோளாறு: வாடிக்கையாளர் கணக்குகளில் இருந்து பணம் குறைந்ததால் பரபரப்பு

டைம்ஸ் குழு

கோட்டகுப்பம் பாரம்பரிய கண்காட்சி வீடியோ தொகுப்பு-1

Leave a Comment