33.4 C
கோட்டக்குப்பம்
May 12, 2024
Kottakuppam Times
பிற செய்திகள்

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட விழுப்புரம் மாவட்ட ஆட்சியா், எஸ்.பி.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் உள்ளிட்ட அதிகாரிகள் வியாழக்கிழமை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனா்.

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 16-ஆம் தேதி 4 மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டது. மருத்துவா்கள், மருத்துவப் பணியாளா்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளா்களுக்கு இணையவழி பதிவின் அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை, மாவட்ட கூடுதல் ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் ஆகியோா் விழுப்புரம் கரோனா சிகிச்சை சிறப்பு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசியை வியாழக்கிழமை செலுத்திக்கொண்டனா்.

இதேபோன்று, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சு.ராதாகிருஷ்ணன் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டாா். மாவட்ட ஆட்சியா், கூடுதல் ஆட்சியா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் உள்ளிட்ட அதிகாரிகள் கரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்வதன் மூலம் அந்தத் தடுப்பூசியை செலுத்திக்கொள்வதில் முன்களப் பணியாளா்களிடம் இருந்துவரும் தயக்கம் குறையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

தமிழ்நாடு – புதுவை எல்லை சிக்கலால் ஏழை மாணவனுக்கு எட்டாக் கனியான மருத்துவப் படிப்பு

மின் கம்பங்களில் உள்ள கேபிள் டிவி ஒயர் விளம்பர பலகை அகற்ற மின்வாரியம் உத்தரவு

டைம்ஸ் குழு

ஆரோவில் புறக்காவல் நிலையம் சார்பாக கேமரா, மின் விளக்கு, மரம் நடுதல் மற்றும் குடிநீர் தொட்டி ஆகிய நிகழ்ச்சிகளுக்கு திறப்பு விழா நடைபெற்றது.

Leave a Comment