28.6 C
கோட்டக்குப்பம்
May 21, 2024
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

நாளை முதல் கோட்டகுப்பதிலும் இரவு 8 மணி வரை கடைகள் இயங்க அனுமதி.

கொரானா நோய்த்தொற்றின் காரணமாக அரசு தமிழகம் முழுவதும் பல விதமான அறிவிப்புகள் மூலம் பொது முடக்கத்தை அமுல்படுத்தி வந்துள்ளது.

அந்த அறிவிப்புகள் ஆகஸ்ட் 31 வரை முடிந்த நிலையில் புதிய தளர்வுகளை தமிழக முதலமைச்சர் அவர்கள் நேற்று அறிவித்தார்.

அதன்படி பலவிதமான அறிவிப்புக்கு மத்தியில் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும் என்ற ஒரு ஆறுதல் அறிவிப்பையும் அறிவித்துள்ளார்கள்.

நமது கோட்டக்குப்பம் பகுதிகளில் ஆரம்பத்தில் மதியம் 2 மணி வரை கடைகள் செயல்பட்டது. பிறகு அது மாலை 7 மணி வரை நீட்டிக்கப்பட்டது. மறுபடியும் மாலை 5 மணி வரை குறைக்கப்பட்டது. தற்போது மாலை 6 மணி வரை கடைகள் செயல்பட்டு வருகிறது.

இந்த நேர கட்டுப்பாடு காரணமாக அனைத்து வியாபாரிகளும் மிகுந்த சிரமத்திற்கும் நஷ்டத்திற்கு உள்ளாக்கினார்கள்.

வியாபாரிகள் மட்டுமல்ல நுகர்வோர்களும் தங்கள் பொருள்களை குறிப்பிட்ட கால நேரத்தில் வாங்கிவிட வேண்டும் என்ற அவசர கதியில் தினமும் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருந்தனர்.

இதனால் பலவிதமான நெருக்கடிகளும் பலவிதமான சுமைகளும் மக்களுக்கும் வியாபாரிகளுக்கும் ஏற்றப்பட்டது.

இரவு 6 மணி வரை மட்டுமே கடைகள் இயங்க வேண்டும் என்ற சூழ்நிலை இருந்ததால் மாலை 6 மணிக்கு மேல் நடைபெறக்கூடிய பல வியாபாரங்கள் நடைபெறாமல் மூடப்பட்டன. அதில் உணவகங்களும், டீக்கடைகளிலும், மளிகை கடைகள், துணிக்கடைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் கடைகளும் அடங்கும். இதனால் இந்த வியாபாரம் செய்த வியாபாரிகளும் கஷ்டப்பட்டார்கள். அதை வாங்க முடியாமல் நுகர்வோர்களும் கஷ்டப்பட்டார்கள். இந்த குறைகளை நீக்க வேண்டும் என்று நமது ஊரில் பல அமைப்புகள் பல தடவை நமது உள்ளூர் நிர்வாகத்தை அணுகி கோரிக்கை வைத்தபோது, அரசு வழிகாட்டலின் படியே நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்று ஒற்றை வரியில் பதில் சொல்லி அதை முடித்துக் கொண்டார்கள்.

இதனால் வியாபாரிகள் மிகவும் சிரமத்திற்கு கடந்த நான்கு மாதங்களாக தள்ளப்பட்டனர். இந்நிலையில் நேற்று அறிவிக்கப்பட்ட பல தளர்வுகளில் கடைகள் இரவு 8 மணி வரை திறந்திருக்கும் என்ற ஒரு அறிவிப்பு செய்யப்பட்டது. இந்த அறிவிப்பை மேற்கோள்காட்டி இன்று நமது பேரூராட்சி மன்ற செயல் அலுவலர் திரு ராமலிங்கம் அவர்களை தொடர்பு கொண்டு நாம் கேட்டிருந்தோம். கோட்டகுப்பத்தில் அரசு அறிவித்தபடி கடைகள் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதிப்பீர்களா என்று கேட்டிருந்தோம்.

அதற்கு அவர்கள் தங்களுக்குள் ஆலோசித்து சொல்வதாக சொன்னார்கள். அதன்படி நம்மை தொடர்புகொண்டு தற்போது செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் அதாவது நாளை முதல் கோட்டகுப்பம் பகுதியில் அனைத்து கடைகளும் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும் என்று வணிகப் பெருமக்கள் மத்தியில் ஒரு ஆறுதல் செய்தியை தெரிவித்துள்ளார்கள்.

ஆகவே வியாபாரப் பெருமக்கள் நாளை முதல் தங்கள் கடைகளை இரவு 8 மணிவரை நடத்திக்கொண்டு தங்கள் வியாபாரத்தை செய்துக் கொள்ளலாம் என்று அறிவுறுத்துகிறார்கள்.

மேலும் அரசு அறிவித்த கட்டுப்பாடுகளான முகக்கவசம், சமூக இடைவெளி போன்றவற்றை நிச்சயமாக கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவித்து உள்ளார்கள்.

இந்த அறிவுறுத்தல்களை பின்பற்றி நோய்த்தொற்று ஏற்படா வண்ணம் வியாபாரத்தை வியாபாரப் பெருமக்கள் செய்துகொள்ள வேண்டும். அதே போன்று நுகர்வோர்களும் பிறருக்கு நோய்த்தொற்று பரவாமல் அரசு அறிவித்த அனைத்து வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

பழுதடைந்த பால்வாடியை பளபளப்பாக மாற்றிய பரகத் நகர் கவுன்சிலர்…!

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பதில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம்.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் த.மு.மு.க. நகர அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றம்.

டைம்ஸ் குழு

Leave a Comment