28.6 C
கோட்டக்குப்பம்
May 21, 2024
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

அல்லல்படும் கோட்டக்குப்பம் வியாபாரிகள்… கண்டுகொள்ளுமா உள்ளூர் நிர்வாகம்?

கொரானா பெரும் தொற்றின் காரணமாக உலகமுழுவதும் மாபெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு வியாபாரிகள், தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள், பொதுமக்கள், அரசுகள் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர்.

அதுபோலவே தமிழ்நாட்டில், அந்த தொற்றின் காரணமாக மாபெரும் இழப்புகளை கஷ்டங்களை அரசும் வியாபாரிகளும் பொதுமக்களும் தினமும் அனுபவித்து வருகிறார்கள். தொற்றின் காரணமாக ஆரம்பத்தில் பல கட்டுப்பாடுகளையும், சில நாட்களுக்கு பிறகு தளர்வுகளை அரசு அறிவித்தது.

இவ்வாறே கடந்த ஐந்து மாதங்கள் நம்முடைய வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது.

முதலில் முழுவதுமாக கடைகளை அடைக்க சொன்னவர்கள். சிறிது நாட்களுக்குப் பிறகு இரவு 7 மணி வரை கடைகளை திறந்து வியாபாரம் செய்யலாம் என்றும், அதன் பிறகு 2 மணி வரை கடைகளை திறந்து வியாபாரம் செய்யலாம் என்றும், அதன் பிறகு 4 மணி வரை, அதன் பிறகு 5 மணி வரை, தற்போது மாலை 6 மணி வரை என்று அந்த தளர்வுகளை அறிவித்துள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதி முதல் சென்னையை தவிர மற்ற இடங்களில் இரவு 7 மணி வரை கடைகளை திறந்து வியாபாரம் செய்யலாம் என்று முதலமைச்சர் அவர்களால் அறிவிப்பு செய்யப்பட்டது. அதன்படி தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் கடைகள் 7 மணி வரை செயல்பட்டு வருகிறது.

நமது ஊருக்கு அருகிலுள்ள திருச்சிற்றம்பலம் கூட்ரோடு போன்ற பகுதிகளில் கூட இரவு 7 மணி வரை கடைகள் இயங்குகிறது. அதேபோல் புதுச்சேரி பகுதியிலும் 9 மணி வரை கடைகள் திருந்து இருக்க அனுமதிக்கப்படுள்ளது, ஆனால் கோட்டக்குப்பத்தில் இன்று வரை அதே 6 மணி வரை மட்டுமே கடைகளை திறந்து வியாபாரம் செய்ய வேண்டும் என்றும் கோட்டகுப்பம் பேரூராட்சி மன்றம் ஒலிபெருக்கி மூலம் தினமும் அறிவிப்பு செய்யப்பட்டு வருகிறது.

கோட்டக்குப்பத்தில் வியாபாரம் செய்பவர்கள் யாரும் அரசு வேலைகள் செய்வது கிடையாது அல்லது ஆபீஸ் உத்தியோகம் செய்யவில்லை. அனைவரும் அன்றாடம் காட்சிகள் போல் பொருள்களை தயாரித்து, பொருட்களை வாங்கி அதை பொதுமக்களுக்கு குறைந்த லாபத்தில் விற்பனை செய்து வருகிறார்கள். நீங்கள் அனுமதித்துள்ள மாலை 6 மணி என்பது வியாபாரம் செய்வதற்கு போதுமான நேரம் கிடையாது. கோட்டகுப்பத்தில் இயங்கும் நூற்றுக்கணக்கான கடைகளில் பல மளிகைக் கடைகள் உண்டு, பல உணவகங்கள் உண்டு, பல காய்கறி கடைகள் உண்டு, பல வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் உண்டு. சில துணிக் கடைகளும் உண்டு, சில அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளும் உண்டு. இவ்வாறு பலவிதமான பொருட்களை வியாபாரம் செய்யும் கோட்டக்குப்ப பகுதி மக்களுக்கு நீங்கள் அறிவித்துள்ள மாலை 6.00 மணி என்பது நிச்சயமாக சரியான நேரமாக கருத முடியாது.

ஏனென்றால் நடுத்தர மக்களும் ஏழை மக்களும் ஹோட்டல் போன்ற உணவகங்களையும், டீக்கடைகளையும் நம்பியுள்ளனர்.

மற்ற ஊர்களில் ஓட்டல்களில் இரவு 8 மணி வரையும் 9 மணி வரையும் பார்சல் மூலம் வியாபாரம் செய்யலாம் என்ற ஒரு நிலைபாடு இருக்கும்போது. கோட்டகுப்பத்தில் மட்டும் ஆறு மணிக்கெல்லாம் அடைக்க வேண்டும் என்று நிர்பந்திக்கப்படுகிறார்கள்.

மக்களுக்கு தேவையான உணவுகளை தயாரித்து வியாபாரம் செய்யும் வியாபாரிகள் மாலைப்பொழுதில் மக்களுக்கு தேவையான உணவு வகைகளை மாலை 4 மணிக்கு மேல்தான் தயார் செய்து, அதை 5 மணி முதல் வியாபாரத்துக்கு பயன்படுத்துவார்கள். அந்த வியாபாரம் 6 மணி முதல் சுமார் 9 மணி வரை நடக்கும். வியாபாரம் தொடங்கும் நேரத்தில் வியாபாரத்தை முடிக்க வேண்டுமென்று சொன்னால், அந்த உணவு பொருட்களை தயாரித்து அவர்கள் அதற்கான பெரும் நஷ்டத்தை அடைவார்கள். அதேபோன்று அந்த உணவு பொருட்களை வாங்க வருபவர்களும் கடைகள் மூடப்பட்டு இருப்பதைக் கண்டு மிகுந்த ஏமாற்றம் அடைகிறார்கள். இங்கு உள்ள மக்கள் சிறு சிறு குடும்பங்களாக வாழ்வதால் அனைவருமே வீட்டில் உணவுகளை சமைத்து சாப்பிடுவது கிடையாது. சிறு குடும்பத்தினர் தங்கள் தேவைக்கான இட்லி, தோசை சப்பாத்தி பேன்றவற்றை ஹோட்டல்களில் வாங்கிய தங்கள் தேவைகளை நிறைவேற்றி வருகிறார்கள். இந்த நிலையில் மேற்படி அந்த ஓட்டல்களை ஆறு மணிக்கெல்லாம் மூட வேண்டும் என்று சொல்வதே வியாபாரிகளுக்கும் நுகர்வோருக்கும் கஷ்டம்.

ஆகையால் இந்த நேர கட்டுப்பாடு அனைவரையும் மிகவும் கஷ்டப்படுத்துகிறது, சோதனைக்கு உள்ளாகிறது. மேலும் டீக்கடை வியாபாரம் என்பது காலையில் ஐந்து மணி தொடங்கி பிற்பகல் 11 மணி வரைக்கும் முதல்கட்ட வியாபாரம் ஆகும். மாலை 4 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை இரண்டாம் கட்டமாக 2 முறையாக அந்த வியாபாரிகள் வியாபாரம் செய்கிறார்கள். காலை வியாபாரத்தை விட மாலை வியாபாரமே அதிகப்படியாக அதிக மக்களால் நுகரப்படும் வியாபாரமாகும். மாலை 4 மணி முதல் 9 மணி வரை நல்ல முறையில் நடக்கும் பொழுது ஆறு மணிக்கெல்லாம் கடைகளை மூடவேண்டும் சொல்வதால் அந்த டீ கடை உரிமையாளர்களும் அதில் பணிபுரியும் தொழிலாளர்களும் மிகவும் சிரமப்படுகிறார்கள். அதே போன்று அந்த தேனீரை நுகர்வோர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைகிறார்கள்.

அதேபோன்று மறு நாள் தேவைக்கான காய்கறிகளை மாலை அலுவலக வேலை முடித்து வந்து மாலை 7 மணிக்கு வாங்கும் அலுவலகப் பணியாளர்கள் காய்கறி கடைகள் இல்லாததனால் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மாலையில் நடக்கும் வியாபாரங்களான செருப்பு கடைகள், துரித உணவகங்கள், சூப்பு சமோசா போன்ற சிற்றுண்டி வியாபாரங்கள் செய்பவர்கள், பஜ்ஜி போண்டா வடை போன்ற கடை வைத்து நடத்துபவர்களுக்கு மாலை வியாபாரம் பிரதானமான வியாபாரம். இந்தக் கடைகளை எல்லாம் மாலை 6 மணிக்கு மூடிவிடவேண்டும் என்று சொல்வது சரியான நடவடிக்கையாக இருக்காது.

சில நாட்களுக்கு முன்பு கோட்டகுப்பம் பகுதியில் கொரானா தொற்று சில காணப்பட்டதால் நேரக் கட்டுப்பாடுகள் போடப்பட்டது. ஆனால் தற்பொழுது கோட்டகுப்பத்தில் அதிக தொற்று இல்லாத நிலை இருக்கும்போது, இந்த நேர கட்டுப்பாடு தேவை இல்லாத ஒன்றாக கருதப்படுகிறது.

அரசு அறிவிப்பையும் பேரூராட்சி மன்ற அறிவிப்புகளையும் கோட்டகுப்பம் மக்கள் முழுமையாக பின்பற்றி வரும் பொழுதே இந்த நேர கட்டுப்பாடு என்பது பொது மக்களையும் வியாபாரிகளையும் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறது.
ஆகவே மற்ற ஊர்களில் இருக்கும் நடைமுறை போன்றே நமது ஊரிலும் மேற்சொன்ன வியாபாரிகளின் நலன்கருதி வியாபார நேரத்தை இரவு 8 மணி வரை நீடித்து அந்த நலிந்த வியாபாரிகளின் வாழ்வில் விளக்கேற்ற வேண்டும். தற்போது உள்ள சூழ்நிலையில் அனைத்து வியாபாரமும் நடந்துவிடவில்லை. உணவு சம்பந்தப்பட்ட வியாபாரம் மட்டுமே நடைபெற்று வருகிறது. மற்ற வியாபாரத்திற்கு செலவு செய்ய மக்களிடம் பணம் இல்லாத காரணத்தினால் மற்ற வியாபாரிகள் வியாபாரம் இல்லாமல் கஷ்டப்படும் நிலையில், வியாபாரம் நடக்க கூடிய இந்த கடைகளுக்கு அதாவது கிடைக்காது நேரத்தை உயர்த்திக் தருவது உள்ளூர் நிர்வாகத்தில் சிறந்த நடவடிக்கையாக இருக்கும் நூறு சதவீதமும் அனைத்து வியாபாரம் நடைபெறாத நிலையில் வியாபாரம் நடக்க கூடிய இந்தக் கடைகளுக்கு நேரத்தை நீட்டிக்க வேண்டும்.

இது சம்பந்தமாக கோட்டகுப்பம் வியாபாரிகள் மனுக்கள் மூலமாகவும் நேரடியாகவும் பல விதமான கோரிக்கை வைத்தும் இதுவரையில் உள்ளூர் நிர்வாகம் பேரூராட்சி நிர்வாகம் செவி சாய்க்காததால், வியாபாரிகளின் இந்த துயர நிலையை அறிந்து நேரக் கட்டுப்பாடு தளர்த்தி இரவு 9 மணி வரை அல்லது 8 மணி வரை வியாபாரம் செய்வதற்கு அறிவுறுத்தி அரசு அறிவித்த அனைத்து பாதுகாப்போடு வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் சார்பாக இந்த கோரிக்கை வைக்கப்படுகிறது

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

பரக்கத் நகரில் குடிநீர் மறு இணைப்பு பெற 2000 ரூபாய் நிர்ணயம்.

கோட்டக்குப்பத்தில் தொடர்ந்து அறிவிக்கப்படாத மின்வெட்டால் மக்கள் அவதி

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பதில் 29-வது மெகா தடுப்பூசி முகாம் நாளை நடைபெறுகிறது.

டைம்ஸ் குழு

Leave a Comment