27.7 C
கோட்டக்குப்பம்
September 28, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

ஹிஜாப் அணிய தடை விதித்ததை கண்டித்து கோட்டக்குப்பம் கீவ்ஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு மகளிர் பி.யூ. கல்லூரியில் கடந்த டிசம்பர் மாதம் ஹிஜாப் அணிந்து வந்த 6 முஸ்லிம் மாணவிகளுக்கு வகுப்பறையில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், கல்லூரி நிர்வாகத்திற்கு கண்டனம் தெரிவித்து 6 மாணவிகளும் ஹிஜாப் அணிந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

மேலும், கல்லூரி நிர்வாகம் தங்களது உடை விவகாரத்தில் தலையிடுவதாக கர்நாடக உயர் நீதிமன்றத்திலும், தேசிய மனித உரிமை ஆணையத்திலும் அவர்கள் முறையிட்டுள்ளனர்.

இந்நிலையில் ஹிஜாப் தடையை கண்டித்து, கோட்டக்குப்பம் காயிதே மில்லத் வளைவு முன்பாக கோட்டக்குப்பம் கீவ்ஸ் சார்பாக கர்நாடகாவில் அரசு கல்லூரி மாணவிகள் ஹிஜாப் அணிவதை தடை செய்து அவர்களின் மத உரிமையை பறித்த கல்லூரி நிர்வாகங்களையும், பாரதிய ஜனதா கட்சி அரசையும் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்துகொண்டு அவர்களுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பதில் நாளை 15 இடங்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்.

டைம்ஸ் குழு

பரக்கத் நகரில் குடிநீர் மறு இணைப்பு பெற 2000 ரூபாய் நிர்ணயம்.

கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட 10, +1, +2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ரொக்கப்பரிசு & பாராட்டுச் சான்றிதழ்.

டைம்ஸ் குழு

Leave a Comment