32.2 C
கோட்டக்குப்பம்
May 13, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

நபிகள் நாயகத்தை இழிவாக பேசிய கல்யாணராமன்மனை கண்டித்து கோட்டக்குப்பத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நபிகள் நாயகத்தை கீழ்த்தரமாக விமர்சித்தும் வன்முறையை தூண்டும் வகையில் பேசிய தமிழக பாரதிய ஜனதா கட்சி செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் மீது கடுமையான சட்டப்பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இன்று 01-02-2021 விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் கோட்டகுப்பம் ECR ரோடு ரவுண்டானா அருகில் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஊர் ஜமாத்தார்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள், தோழமை கட்சி தொண்டர்கள் மற்றும் பெண்களும் பெரும் திரளாக கலந்துகொண்டு கல்யாணராமனுக்கு எதிராகவும் பிஜேபி அரசுக்கு எதிராகவும் கண்டன முழக்கங்கள் எழுப்பினார்கள்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியின் கொரோனா தொற்று நிலவரம்.

கோட்டக்குப்பம் சுகாதாரத்துறையின் முக்கிய அறிவிப்பு

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் பெரிய தெரு தக்வா மஸ்ஜித் & பரகத் நகர் மஸ்ஜிதுல் பரகத் வல் மத்ரஸஹ் சார்பாக நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது

டைம்ஸ் குழு

Leave a Comment