33.2 C
கோட்டக்குப்பம்
August 12, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பெண்கள் இஜ்திமா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோட்டக்குப்பம் கிளையின் சார்பாக இன்று ஞாயிற்றுக்கிழமை(19-03-2023) ஜமியத் நகர், கமால் தோப்பில் உள்ள தவ்ஹீத் மர்கஸ் அருகில் உள்ள திடலில் காலை 10:30 மணி முதல் மாலை 5 மணி வரை பெண்களுக்கான மாபெரும் ஒரு நாள் இஜ்திமா நடைபெற்றது.

இதில் ஏராளமான தாய்மார்களும், சகோதரிகளும், சிறுவர் சிறுமிகளும் கலந்து கொண்டனர்.

இதில் வரதட்சணையை ஆதரிப்பது மணமகன் வீட்டாரா? அல்லது மணமகள் வீட்டாரா? என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் பேச்சாளர் பயிற்சி வகுப்பு மாணவிகளால் நடைபெற்றது. சஹாபிய பெண்களின் வாழ்வு தரும் படிப்பினை என்ற தலைப்பில் ஜெசிமா யாஸ்மின் ஆலிமா அவர்களும், திசை மாறும் தீன்குல பெண்கள் என்ற தலைப்பில் தஸ்லிமா ஆலிமா அவர்களும் நபி வழி திருமணத்தில் பெண்களின் பங்கு என்ற தலைப்பில் சுஜா அலி MISc அவர்களும், மேலும் நவீன உலகில் இஸ்லாமிய குடும்பம் என்ற தலைப்பில் முஹம்மது யூசுப் MISc அவர்களும் சிறப்புரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மதிய உணவு பரிமாறப்பட்டது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

அஞ்சுமன் நூற்றாண்டு ஆரம்ப விழா, பதிப்பகத் தொடக்க விழா மற்றும் வலைத்தள திறப்பு விழா நடைபெற்றது.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பதில் நாளை 5-ஆவது மெகா தடுப்பூசி முகாம்! 12 இடங்களில் நடைபெறவுள்ளது.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் காவல் ஆய்வாளர் திரு.சரவணன் அவர்கள் பணியிடம் மாற்றம். சேவையை பாராட்டி முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து.

டைம்ஸ் குழு

Leave a Comment