28.6 C
கோட்டக்குப்பம்
May 21, 2024
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் எம்.ஜி ரோட்டில் வேகத்தடை அமைக்கக்கோரியும் மற்றும் நடைபாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரியும் நகராட்சிக்கு பொதுநலன் மனு!

கோட்டக்குப்பம் நகராட்சிக்கு உட்பட்ட M.G ரோட்டில் வேகத்தடை அமைக்கக்கோரியும் மற்றும் M.G ரோட்டில் உள்ள நடைபாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரியும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் கிளை சார்பாக நகராட்சி ஆணையருக்கும் மற்றும் நகராட்சி தலைவருக்கும் 22.11.2022 செவ்வாய்க்கிழமை அன்று பொதுநலன் மனு வழங்கப்பட்டது.

அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது,

கோட்டக்குப்பம் நகராட்சிக்கு உட்பட்ட M.G ரோட்டில் வாகன போக்குவரத்து அதிகமாக உள்ளது. இதனால் சிறு சிறு விபத்துகள் அதிகமாக நடைபெறுகிறது. இதை சரி செய்வதற்க்கு எங்கள் ஜமாஅத்தின் சார்பாக இரண்டு கோரிக்கைகளை முன்வைக்கின்றோம்.

  1. கோட்டக்குப்பம் M.G ரோட்டில் உள்ள புஸ்தானிய பள்ளிவாசல் எதிரில் பழையபட்டன பாதை செல்லும் ரோடு உள்ளது . இந்த பகுதியில் இரு புறமும் ரோட்டில் வேகத்தடையும், கோவில்மேட்டில் ஒரு புறம் வேகத்தடை உள்ளது. அந்த பகுதியில் ஒரு வேகத்தடையும் ஏற்பாடு செய்துவிட்டால் ஏறக்குறைய விபத்துகளை தடுத்துவிடலாம்.
  2. கோட்டக்குப்பம் நகராட்சிக்கு உட்பட்ட M.G ரோட்டில் வியாபாரிகளின் ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளது. குறிப்பாக கடையின் விளம்பர சைடு பேனர்களை ரோட்டில் வைத்து இருக்கிறார்கள். இதனாலும் பல விபத்துகள் நடைபெறுகிறது. கடைக்காரர்களுக்கு இடையே போட்டி போட்டுக்கொண்டு பேனர்களை ரோட்டில் வைத்து பொதுமக்களுக்கு மிகவும் இடையூர் செய்கிறாரகள். ஆகவே தாங்கள் 6 மாதங்களுக்கு ஒரு முறையாவது இந்த பகுதிக்கு வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றினால் நன்றாக இருக்கும்.

நாங்கள் பொதுமக்களின் சார்பாக வைக்கும் இந்த 2 கோரிக்கைகளையும் நடைமுறை படுத்தி வேகத்தடையும், ஆக்கிரமிப்புகளையும் அகற்றவேண்டும் என்று தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

குறிப்பு: ஆக்கிரமிப்புகளை அகற்றும் பொழுது M.G ரோட்டில் புதிதாக கட்டிய சைடு வாய்க்காலில் சில வியாபாரிகள் நிரந்தரமாக ஆக்கிரமிப்பு செய்து பொதுமக்கள் அதில் நடக்க முடியாமல் செய்து இருக்கிறார்கள். இதையும் தங்கள் கவனத்திற்க்கு கொண்டுவருகிறோம்.

என மனுவில் கூறப்பட்டுள்ளது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பதில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம்.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பத்தில் நாளை வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டை இணைப்பு சிறப்பு முகாம்.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட 2 நபர்களுக்கு கொரோனா தொற்று…

Leave a Comment