34.2 C
கோட்டக்குப்பம்
May 13, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

தமிழ்நாடு வக்பு வாரியம் நடத்தும் அரசு வேலை வாய்ப்புக்கான பயிற்சி திட்டத்தின் நேர்காணல் கோட்டக்குப்பத்தில் நடைபெற்றது.

கோட்டக்குப்பத்தில் தமிழ்நாடு வக்பு வாரியம் நடத்தும் அரசு வேலை வாய்ப்புக்கான பயிற்சி திட்டத்தின் விழுப்புரம் மாவட்டத்தின் நேர்காணல் ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசலில் ஞாயிற்றுக்கிழமை(28/08/2022) நடைபெற்றது.

இதில் UPSC சிவில் சர்வீஸ் IAS, மத்திய அரசின் SSC, தமிழக அரசின் TNPSC -Group 1,2,3,4 & VAO முழு நேரம் மற்றும் பகுதிநேரம் ஆன்லைனில் பயிற்சி என பல்வேறு படிப்புகளுக்காக அரசு வேலை வாய்ப்புக்கான பயிற்சி திட்டம் நேர்காணல் நடைபெற்றது.

இதில் திரளான மாணவர்கள் மற்றும் கல்லூரி முடித்த இளைஞர்கள் கலந்து கொண்டு தங்களின் பயிற்சியை பதிவு செய்துள்ளனர்.

இந்நிகழ்வில் ஜாமிஆ மஸ்ஜித் முத்தவல்லி, நிர்வாக குழு உறுப்பினர்கள், சமூக சேவகர்கள், பெற்றோர்கள் திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

மேலும், விடுபட்டவர்களுக்கு அடுத்த நேர்காணல் வரும் ஞாயிற்றுக்கிழமை(04/09/2022) காலை 10 மணி முதல் 12 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பதில் நாளை 20-வது மெகா தடுப்பூசி முகாம்.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பதில் நாளை மெகா கொரோனா தடுப்பூசி முகாம்.

டைம்ஸ் குழு

கோட்டகுப்பதில் நோன்பு பெருநாள் மிக உற்சாகக் கொண்டாட்டம் (படங்கள்)

Leave a Comment