June 28, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பதில் நாளை 15 இடங்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்.

கொரோனா பரவல் அதிகரிப்பதால் தமிழகத்தில் நாளை மீண்டும் ஒரு லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். முன்களப் பணியாளர்களுக்கும் 60 வயதை கடந்தவர்களுக்கும் அரசு மருத்துவமனைகளில் பூஸ்டர் தடுப்பூசி போடப்படுகிறது, மேலும் மெகா தடுப்பூசி முகாம்களிலும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

அதன்படி, கோட்டக்குப்பதில் நாளை (ஞாயிற்றுக்கிழமை – 12/06/2022) 15 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம், காலை 8 மணி முதல் கீழ்க்கண்ட இடங்களில் நடைபெறவுள்ளது.

  1. அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி, கோட்டக்குப்பம்.
  2. பரகத் நகர் பள்ளிவாசல், கோட்டக்குப்பம்.
  3. சிவன் கோயில், சின்ன கோட்டக்குப்பம்.
  4. அங்கன்வாடி மையம், சத்யா நகர், சின்ன கோட்டக்குப்பம்.
  5. அங்கன்வாடி மையம், சோதனைக்குப்பம்.
  6. அங்கன்வாடி மையம், நடுக்குப்பம்
  7. அங்கன்வாடி மையம், கோட்டக்குப்பம் காலனி.
  8. அங்கன்வாடி மையம், ஜமியத் நகர்
  9. அங்கன்வாடி மையம், கோட்டமேடு.
  10. அங்கன்வாடி மையம், தேவி தியேட்டர்
  11. ஜெயமுத்து மாரியம்மன் கோவில், சின்ன முதலியார் சாவடி குப்பம்
  12. அங்கன்வாடி மையம், சின்ன முதலியார் சாவடி குப்பம்
  13. அரசு நடுநிலைப் பள்ளி, பெரிய முதலியார் சாவடி.
  14. அங்கன்வாடி மையம், இந்திரா நகர்
  15. அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தந்தராயன்குப்பம்.

மேலும் சந்தேகங்கள் மற்றும் விபரங்களுக்கு:
திரு. ரவி,
(Health inspector)
9486476433
சுகாதார ஆய்வாளர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

உலமாக்கள் நல வாரியத்தில் இஸ்லாமியா்கள் பதிவு செய்யலாம்

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் பரகத் நகர் அல்-மஸ்ஜிதுல் முபாரக் வல் மதரஸா சார்பில் 78-வது சுதந்திர தின விழா நிகழ்ச்சி.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் பேரூராட்சிக்கு உட்பட்ட நடுக்குப்பம் மீனவ கிராமத்தில் மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம்

Leave a Comment