34.2 C
கோட்டக்குப்பம்
May 13, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஆலோசனை கூட்டம்: வேலை நேரம், பொருட்களின் இருப்பு அறிவிப்பு முறையாக கடைபிடிக்க அறிவுறுத்தல்.

கோட்டக்குப்பம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கி வரும் நியாய விலை கடை ஊழியர்களின் ஆலோசனை கூட்டம் நகர் மன்ற அலுவலகத்தில் நகர் மன்ற தலைவர் எஸ்.எஸ்.ஜெயமூர்த்தி அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது.

ஆலோசனை கூட்டத்தில் நியாய விலை கடைகளில் பொருட்கள் சரியான எடையில் வழங்க வேண்டும், விடுமுறை தினம் தவிர மற்ற வேலை நாட்களில் தினமும் காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை கடைகள் திறந்து குடும்ப அட்டை தாரர்களுக்கு பொருட்கள் விநியோகம் செய்ய வேண்டும், அறிவிப்பு பலகை வைத்து பொருட்களின் இருப்புக்களின் விபரம் மற்றும் கடை திறப்பு குறித்து பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

மேலும் ஊழியர்கள் தங்களது கோரிக்கைகளை தெரிவித்தனர், அவர்களின் கோரிக்கைகளை சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் பேசி தீர்த்து வைப்பதாக கூறினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் நகர் மன்ற துணைத்தலைவர் ஜீனத் பீ முபாரக், மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப் பணி சிறப்பு முகாம்கள், நவம்பா் 12,13, 26, 27 தேதிகளில் நடக்கிறது.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் பரகத் நகர் அல்-மஸ்ஜிதுல் முபாரக் வல் மதரஸா சார்பில் குடியரசு தின விழா நிகழ்ச்சி.

டைம்ஸ் குழு

இப்ராஹிம் கார்டன் பகுதியில் இனியாவது குப்பைகள் கொட்டுவது தவிர்க்கப்படுமா? கோட்டக்குப்பம் நகராட்சியின் அதிரடி நடவடிக்கை.

டைம்ஸ் குழு

Leave a Comment