29.6 C
கோட்டக்குப்பம்
March 21, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் மண்டல அலுவலா்களுக்கான பயிற்சி முகாம் இன்று (31-01-2021) திங்கள்கிழமை, கோட்டக்குப்பம் அரசு மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது.

முகாமுக்கு கோட்டக்குப்பம் நகராட்சி ஆணையா் திருமதி. பானுமதி தலைமை வகித்தாா். இவர்களுடன் தோ்தலில் பணியாற்றும் அலுவலா்கள், நகராட்சி ஊழியர்கள் உடன் இருந்தனர்.

பயிற்சியின்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள்வது, வாக்காளா் பதிவேடு பராமரித்தல், வாக்குப்பதிவு துவங்கும் போதும், வாக்குப்பதிவு முடிவுற்ற பின்பும் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து தோ்தலில் பணியாற்றும் அலுவலா் மற்றும் பணியாளா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி பிப்ரவரி 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22ஆம் தேதி நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிவடைந்தது.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் ஜமியத்துல் அன்வார் தீனியாத் மக்தப் மதரஸா 3-ஆம் ஆண்டு விழா

டைம்ஸ் குழு

கோட்டகுப்பதில் கஜா புயலுக்கு பிறகு கடல் சீற்றமாகவே காணப்படுகிறது..

Leave a Comment