29.9 C
கோட்டக்குப்பம்
May 19, 2024
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் குற்ற செயலை தடுக்க வியாபாரி சங்க நிர்வாகிகளுடன் போலீஸார் ஆலோசனை.

சமீபகாலமாக கோட்டக்குப்பத்தில் சுற்றியுள்ள பகுதிகளில் குற்ற செயல்களை தடுக்க காவல்துறை பலவிதமான முயற்சிகளை எடுத்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக இன்று அதற்கான ஆலோசனை கூட்டம் கோட்டக்குப்பம் பகுதியில் இயங்கும் வியாபாரம் வணிகர் சங்கங்களின் நிர்வாகிகளுடன் போலீசார் ஆலோசனை செய்தார்கள். இந்த ஆலோசனை கூட்டத்தில் கோட்டக்குப்பத்தில் வணிகர்கள் சங்கம் சார்பாக மகிமை முதல் நேஷனல் சூப்பர் மார்க்கெட் வரை கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதையும், காயிதேமில்லத் ஆர்சியில் பொருத்தப்பட்டுள்ள கேமராவின் தேவையை குறித்து காவல்துறை அதிகாரிகள் பாராட்டி பேசினார்கள்.

இதுமட்டுமல்லாமல் விடுபட்ட அனைத்துப் பகுதிகளிலும் கேமராக்கள் பொருத்துவதற்கு வியாபாரிகள் மற்றும் காவல் துறையினர் இணைந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

கண்காணிப்பு கேமரா மூலம் குற்ற நடவடிக்கைகளை கண்காணித்து, அதன் மூலம் மேல் நடவடிக்கை எடுக்கவும், தடுக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று போலீசார் வலியுறுத்தினார்கள்.

அதேபோன்று, வியாபாரிகளும் தங்களுக்கு இருக்கும் சிரமங்களை போலீசாரிடம் எடுத்துரைத்தனர். வியாபாரத்தில் நடைபெறும் சிரமங்களை நிவர்த்தி செய்யவும் வணிகர்கள் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக அடுத்து அனைத்து வியாபாரிகளையும் அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர் K. முத்துக்குமரன், சப்-இன்ஸ்பெக்டர் E. தங்கவேல் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் A. கபீர் சாஹிப் ஆகியோர் போலீஸ் தரப்பிலும், வியாபாரிகள் தரப்பில் அனைத்து வியாபாரிகள் சங்க செயலாளர் அப்துல் ரவூப், துணை செயலாளர் பிலால் முஹம்மது, துணைத்தலைவர் பூபாலன், கௌரவத் தலைவர் சாகுல் அமீது, அமைப்பாளர் முகமது ரபிக், செய்தி தொடர்பாளர் அமீர் பாஷா, செயற்குழு உறுப்பினர் அப்துல் காதர் ஆகியோரும், எம்ஜி ரோடு வியாபாரிகள் சங்கம் சார்பாக அதன் தலைவர் நஜீர், அதன் துணைத் தலைவர் ரவி, அதன் செயற்குழு உறுப்பினர் பழனிச்சாமி மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் மிஸ்வாக் சார்பில் 420 பயனாளிகளுக்கு 15 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு பை வினியோகம்.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் அல்ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக்கல்லூரியின் கூட்டுக்குர்பானி அறிவிப்பு…

கோட்டக்குப்பதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

டைம்ஸ் குழு

Leave a Comment