27.7 C
கோட்டக்குப்பம்
September 28, 2026
Kottakuppam Times
Uncategorized கோட்டக்குப்பம் செய்திகள்

வானூர் தொகுதியில் களம் காணும் 7 வேட்பாளர்கள்.

விழுப்புரம் மாவட்டத்தில் வானூா், செஞ்சி, மயிலம், திண்டிவனம், விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூா் ஆகிய 7 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் மாா்ச் 12-இல் தொடங்கி 19-ஆம் தேதி வரை நடைபெற்றது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 20-ஆம் தேதி நடைபெற்றது. இதில் 7 தொகுதிகளிலும் 105 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன.

வேட்பு மனுக்களை திரும்பப் பெற திங்கள்கிழமை கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், செஞ்சி, வானூா், திருக்கோவிலூா் ஆகிய மூன்று தொகுதிகளில் தலா ஒரு சுயேச்சை என 3 போ் தங்களது மனுக்களை திரும்பப்பெற்றனா். இதையடுத்து, இறுதி வேட்பாளா்கள் பட்டியல் அந்தந்த தொகுதிகளில் வெளியிடப்பட்டு, வேட்பாளா்களுக்கான சின்னங்களும் ஒதுக்கப்பட்டன.

இந்நிலையில் நம் வானூர் தொகுதியில் சென்ற வருடம் 9 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில், இந்த வருடம் வெறும் 7 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதன் விவரம்:

புகைப்படம்கட்சி பெயர்சின்னம்

வன்னி அரசு
விடுதலை சிறுத்தைகள் கட்சி

சக்கரபாணி
அதிமுக

லட்சமி
நாம் தமிழர் கட்சி

கணபதி
தே.மு.தி.க

சந்தோஷ்குமார்
மக்கள் நீதி மையம்
விநாயகமூர்த்திபகுஜன் சமாஜ் பார்ட்டி

சக்திவேல்
சுயேச்சை

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டகுப்பம் மற்றும் புதுச்சேரி எல்லையில் பதற்றம்.

கோட்டக்குப்பம் மிஸ்வாக் சார்பாக “ஆர்சனிக் ஆல்பம் 30” மருந்து வழங்கப்பட்டது.

கோட்டக்குப்பம் பரகத் நகர் அல்-மஸ்ஜிதுல் முபாரக் வல் மதரஸாவில் தேசியக் கொடியேற்றம்.

டைம்ஸ் குழு

Leave a Comment