27.7 C
கோட்டக்குப்பம்
September 28, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயா்வைக் கண்டித்து கோட்டக்குப்பதில் ஆட்டோ பேரணி கண்டன ஆர்ப்பாட்டம்.

கோட்டக்குப்பம் பகுதியில் இன்று (23-02-2021) பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து, ஆட்டோ தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பாக “ஆட்டோ பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம்” மாலை 4-மணி அளவில் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு T. வெங்கடேசன் மற்றும் ஜாபர் அலி அவர்கள் தலைமை தாங்கினார்கள்.

மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில் புதுச்சேரி ஒட்டிய பகுதி கோட்டகுப்பம் ஆட்டோக்கள் புதுச்சேரி சென்று வருவதற்கு, தமிழக போக்குவரத்துத் துறையும், புதுச்சேரி போக்குவரத்து துறையும் இணைந்து சென்றுவர அனுமதி வழங்க கோரியும், 2005-க்கு பிறகான வாகனங்களை ஓட்டக்கூடாது என மோட்டார் வாகன சட்டத்தில் சட்டத்திருத்தம் ஏற்படுத்தக்கூடாது என்று கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பதில் ஃபெஞ்சல் புயலின் கோரத்தாண்டவம்: வரலாறு காணாத மழையால் மக்கள் தவிப்பு.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பத்தில் ஈகைத் திருநாள் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்.

டைம்ஸ் குழு

கோட்டகுப்பம் முஸ்லிம் லீக் சார்பில் பெருநாள் அன்பளிப்பு..

Leave a Comment