33.2 C
கோட்டக்குப்பம்
May 18, 2024
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் பேரூராட்சி மற்றும் சுகாதாரத்துறை இணைந்து ‘ஆர்சனிக் ஆல்பம் 30’ மருந்து வீடு வீடாக வழக்கப்பட்டுவருகிறது.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ‘ஆர்சனிக் ஆல்பம் 30’ என்ற ஹோமியோபதி மருந்தை எடுத்துக்கொள்ள ஆயுஷ் மருத்துவத் துறையினர் பரிந்துரைக்கின்றனர்.

அதன் அடிப்படையில், கோட்டக்குப்பம் பேரூராட்சி, சுகாதாரத் துறை மற்றும் கோட்டக்குப்பம் DSP அஜய் தங்கம் அவர்கள் இணைந்து, கோட்டக்குப்பம் பகுதி முழுவதும் ‘ஆர்சனிக் ஆல்பம் 30’ மருந்து வீடு வீடாக சென்று வழக்கப்பட்டுவருகிறது.

பயன்படுத்தும் முறை :

நாளொன்றுக்கு வெறும் வயிற்றில் ‘3 நாள்களுக்கு’ காலை மட்டும் 4 மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.

12-வயதுகுள் இருக்கும் சிறுவர்களுக்கு 2 மாத்திரை எடுத்துக் கொள்ளவேண்டும்.

இந்த மருந்தை எடுத்துக்கொள்வதன் மூலம் நோய்க் கிருமி மனித உடலுக்குள்ளே வரும்போது எதிர்கொள்வதற்கு எதிர்சக்தி கிடைக்கிறது. மனிதனின் மூச்சுக்குழாய் மற்றும் நுரையீரலைத் தூண்டி சுவாச உறுப்புகளின் செயல்திறனை அதிகரிக்கிறது. இதனால் உடலில் நோய்த் தடுப்பு மற்றும் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கும். இதன் மூலமாக வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகும்போது கூட அதன் பெருக்கத்தைத் தடை செய்து வெளியேற்றுவதனால் உடலை வைரஸ் தொற்றில் இருந்து காக்கிறது.

இந்த மருந்தினால் எந்த பக்க விளைவுகளும் ஏற்படாது. மற்ற மருந்துகளைப் போன்று ஹோமியோபதி மருந்து ரத்தத்தில் கலப்பதில்லை. நரம்பு வழியாக செயல்படக் கூடியது.

எனவே, கொரோனா தொற்று நம்மை தாக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ‘ஆர்சனிக் ஆல்பம் 30’ என இந்த ஹோமியோபதி மருந்தை எடுத்துக்கொள்ளலாம்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகளின் ஹஜ் பெருநாள் வாழ்த்து செய்தி..

கோட்டக்குப்பத்தில் நாளை தளர்வில்லா முழு அடைப்பு: செயல் அலுவலர் அறிவிப்பு

கோட்டக்குப்பம் குவைத் ஜமாத் சார்பாக பித்ரா பொருள் வினியோகம் செய்யப்பட்டது.

Leave a Comment