33.9 C
கோட்டக்குப்பம்
September 11, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் நாளை முதல் கடைகளை 3 மணிக்குள் அடைக்க வேண்டும்.

கோட்டக்குப்பத்தில் கொரானா தொற்று தற்போது புதிதாக ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக நோய்த்தொற்று பரவாமல் இருக்க கடைகளை மதியம் 2 மணிக்கெல்லாம் அடைக்க வேண்டும் என்று கோட்டகுப்பம் செயல் அலுவலர் மூலம் அறிவிக்கப்பட்டு இருந்தது.

தற்போது மாலை 4 மணிவரை கடைகள் செயல்பட்டு வந்த நிலையில் 2 மணிக்கெல்லாம் கடைகளை அடைக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.

கோட்டகுப்பம் பகுதியில் செயல்படும் அனைத்து வியாபாரிகளும் கடைகளை மதியம் 3 மணிவரை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று மனு மூலமாக அனைத்து வியாபாரிகள் கையொப்பமிட்டு மனு செயல் அலுவலர் அவர்களிடம் நேரடியாக சந்தித்து அளித்துள்ளனர்.

அதன்படியே வியாபாரிகளின் கோரிக்கைகளை ஏற்று மதியம் 2.30 மணிக்கெல்லாம் கடை களை எடுத்து வைத்து மூன்று மணிக்கெல்லாம் அடைத்து விட வேண்டும் என்று செயல் அலுவலர் அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

நாளை முதல் மதியம் 2.30 மணிக்கெல்லாம் கடைகள் எடுத்து வைத்து 3 மணிக்கெல்லாம் அடைத்துவிட வேண்டும்.

கோட்டக்குப்பம் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, எங்களின் செயலியை பதிவிறக்கம் செய்யவும் – https://play.google.com/store/apps/details?id=com.kottakuppamtimes.news

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

சஹர் நேரங்களில் குடி தண்ணீர் வரவில்லை…

கோட்டக்குப்பம் பரகத் நகரில் மற்ற பகுதியை போன்று சாதாரண வரி விதிக்க பள்ளிவாசல் நிர்வாகம் கோரிக்கை.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு.

டைம்ஸ் குழு

Leave a Comment