குவைத் நாட்டில் வசித்து வரும் கோட்டக்குப்பம் நகர மக்கள், இன்று(20/03/2026) நோன்பு பெருநாளை வெகு விமரிசையாகவும், உற்சாகத்துடனும் கொண்டாடினர்.
பெருநாளை முன்னிட்டு, குவைத்தில் உள்ள பல்வேறு பள்ளிவாசல்களில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் கோட்டக்குப்பம் வாசிகள் திரளாகக் கலந்துகொண்டனர்.
தொழுகை நிறைவடைந்த பின்னர், அவர்கள் ஒருவரையொருவர் ஆரத் தழுவி, ‘ஈத் முபாரக்’ கூறி, தங்களது பெருநாள் வாழ்த்துக்களைப் பரஸ்பரம் பரிமாறிக் கொண்டனர்.
















