26.1 C
கோட்டக்குப்பம்
March 22, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் மிஸ்வாக் சார்பில் 450 பயனாளிகளுக்கு 15 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வினியோகம்.

ஏழை எளியவரும் சிறப்பான முறையில் பெருநாளை கொண்டாடும் நோக்கத்தில் வருடா வருடம் சமைக்கத் தேவையான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு கோட்டக்குப்பம் மிஸ்வாக் சார்பில் வழங்கப்படுவது வழக்கம்.

அதேபோல், இந்த வருடமும் கோட்டக்குப்பம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மிஸ்வாக் சார்பாக 15 மளிகை பொருட்கள் – பாஸ்மதி, பொன்னி அரிசி, சர்க்கரை, எண்ணெய், கோதுமை, மைதா, ரவை, சேமியா, பட்ட, ஏலக்காய், கிராம்பு, பிரியாணி இலை, முந்திரி, திராட்சை, பிரியாணி மசாலா, பூண்டு, நெய், பிஸ்கட் பாக்கெட், துணி சோப்பு உள்ளடக்கிய 600 ரூபாய் மதிப்பில் தொகுப்பு பை 450 குடும்பங்களுக்கு நேற்று(20/04/2023) மாலை 3 மணி அளவில் வழங்கப்பட்டது.

நிகழ்வில் மிஸ்வாக் செயற்குழு உறுப்பினர்கள், குவைத் ஜமாத் நிர்வாகிகள், நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டு ஏழைகளுக்கு மளிகை தொகுப்பு பையை வழங்கினர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

அமலானது தளா்வில்லா பொதுமுடக்கம்: கோட்டக்குப்பதில் காலை முதலே வெறிச்சோடிய சாலைகள்.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பதில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம்.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் மிஸ்வாக் சார்பில் 420 பயனாளிகளுக்கு 15 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு பை வினியோகம்.

டைம்ஸ் குழு

Leave a Comment