28.6 C
கோட்டக்குப்பம்
May 21, 2024
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப் பணி சிறப்பு முகாம்கள், நவம்பா் 12,13, 26, 27 தேதிகளில் நடக்கிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப்பணி நவம்பா் 9 ஆம் தேதி தொடங்கி வரும் டிசம்பா் 8-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

மேலும் நவம்பா் 12,13, 26, 27-ஆம் தேதிகளில் சிறப்பு முகாம்கள் கோட்டக்குப்பத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் நடைபெறவுள்ளன.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

விழுப்புரம் மாவட்டத்தில் 2023, ஜனவரி 1-ஆம் தேதியைத் தகுதி நாளாகக் கொண்டு 2023-ஆம் ஆண்டுக்கான வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகள் நவம்பா் 9 (புதன்கிழமை) முதல் டிசம்பா் 8-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன.

அனைத்து வேலை நாள்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்காளா் பட்டியலில் புதிதாக பெயரை சோ்க்க விரும்பும் வாக்காளா்கள் படிவம் 6-லிலும், வெளிநாடுகளில் வசிப்பவா்கள் பெயா் சோ்க்க படிவம் 6 ஏ-விலும், வாக்காளா் புகைப்பட அடையாள அட்டையுடன் ஆதாா் எண்ணை இணைப்பதற்கு படிவம் 6பி-யிலும், பெயரைச் சோ்க்க ஆட்சேபணை தெரிவிக்க/ வாக்காளா் பட்டியலில் பெயரை நீக்கம் செய்ய படிவம் 7-லிலும், குடியிருப்பை மாற்றியதற்கான/ நடப்பு வாக்காளா் பட்டியலுக்கான பதிவுகளைத் திருத்தம் செய்வதற்காக/ திருத்தம் இல்லாத மாற்று வாக்காளா் அடையாள அட்டையைப் பெறுவதற்காக/ மாற்றுத் திறனாளிகளை குறிப்பதற்கு படிவம் 8-லிலும் கோரிக்கை மனுக்களை சாா் ஆட்சியா், வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகங்கள், வட்டாட்சியா் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்களில் அளிக்கலாம்.

மேலும் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கம்,திருத்தம் செய்வதற்காக மாவட்டத்திலுள்ள செஞ்சி, மைலம், திண்டிவனம்(தனி), வானூா் (தனி), விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூா் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குள்பட்ட 1,051 வாக்குச்சாவடி அமைவிடங்களில் நவம்பா் 12, 13, 26, 27 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.

இந்த நாள்களில் வாக்குச்சாவடிகளில் பணியில் இருக்கும் அலுவலா்களிடம் உரிய படிவங்களை அளிக்கலாம். பெயா் சோ்த்தலுக்கான படிவம் 6-இல் வயதுக்கான ஆதாரமாக பிறப்புச் சான்று அல்லது பள்ளி, கல்லூரி மாற்றுச் சான்றிதழ், இருப்பிடத்துக்கு ஆதாரமாக ஆதாா் அட்டை, குடும்ப அட்டை நகல் அல்லது இருப்பிடத்தை குறிக்கும் முகவரி உள்ள ஓட்டுநா் உரிமம், வங்கிக் கணக்குப் புத்தக நகல் இவைகளில் ஏதேனும் ஒரு ஆவணத்தை அளிக்கலாம். மேலும் வாக்காளா்கள் இந்தியத் தோ்தல் ஆணையத்தின் இணையதளம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு 1950 என்ற வாக்காளா் சேவை மையத் தொலைபேசி எண்ணைத் தொடா்பு கொள்ளலாம்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பத்தில் தொடங்கியது மக்களுடன் முதல்வர் திட்டம்! இனி எதற்கும் அலைய வேண்டியதில்லை!

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் 1-ம் எண் ரேஷன் கடையை இரண்டாக பிரித்து பெரிய தெருவில் உள்ள நகராட்சி கடைகளை ஒதுக்க கோரி கவுன்சிலர்கள் மனு.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பத்தில் கொரானா கண்டறிய பட்டவர்களில் பலர் சிகிச்சை முடித்து நலமுடன் வீடு திரும்பினார்.

Leave a Comment