33.2 C
கோட்டக்குப்பம்
August 12, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் அரசு மேல்நிலை பள்ளியில் 75-வது சுதந்திர தின விழா.

கோட்டக்குப்பம் அரசு மேல்நிலை பள்ளியில் 75-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

முதலில் பள்ளி மாணவ மாணவிகள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினார். சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட நகர மன்ற தலைவர் எஸ்.எஸ்.ஜெயமூர்த்தி அவர்கள் தேசிய கொடி ஏற்றி மாணவ மாணவியர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

நடந்து முடிந்த பொதுத்தேர்வில் கோட்டக்குப்பம் அரசு மேல்நிலை பள்ளி 100% தேர்சிக்கு ஒத்துழைத்த ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கி வாழ்த்தினார்.

விழாவில், கோட்டக்குப்பம் மக்களின் நீண்ட நாள் பிரச்சனையான குடிநீர் பற்றாக்குறையை போக்கும் விதமாக கீழ்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்க தனது சொந்தமான இடத்தை கோட்டக்குப்பம் நகராட்சிக்கு தானமாக வழங்கிய ஜனாப் யூசுப் அவர்களுக்கு நகர மன்ற தலைவர் எஸ் எஸ் ஜெயமூர்த்தி அவர்கள் மலர் கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

மேலும், இந்நிகழ்ச்சியில் அரசின் விலையில்லா மிதிவண்டியை மாணவ/மாணவிகளுக்கு வழக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கோட்டக்குப்பம் நகரமன்ற துணைத்தலைவர் ஜீனத் பீ முபாரக், நகர மன்ற உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர், ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து மெழுகுவர்த்தி ஏந்தி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் 3-ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டம்.

டைம்ஸ் குழு

இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது: கோட்டக்குப்பம் – முத்தியால்பேட்டை எல்லைகள் அடைப்பு.

டைம்ஸ் குழு

Leave a Comment