29.6 C
கோட்டக்குப்பம்
March 21, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரியில் சுதந்திர தின பவள விழா கொண்டாடப்பட்டது.

சுதந்திர இந்தியாவின் பவள விழா ஆண்டு இது. 75 ஆண்டுகால சுதந்திர இந்தியாவை கொண்டாடும் விதமாக, கோட்டக்குப்பம் அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி சார்பாக மூவர்ண தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி இன்று (ஆக. 15) நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி செயற்குழு உறுப்பினர் ஹாஜி யஹ்யா மன்பயீ அவர்கள் தேசியக் கொடி ஏற்றினார். இதில் உயர்மட்ட குழு உறுப்பினர்கள் முஹம்மது இலியாஸ், ஹாஜி V. R. முஹமது இப்ராஹிம், ஹாஜி A. இஹ்சானுல்லாஹ், சபியுல்லாஹ் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ஹாஜி அப்துல் குத்தூஸ், பிலால் முகமது, ரஹமதுல்லாஹ், முஹமது பாரூக், மௌலவி முஹம்மது யஹ்யா ரப்பானி, முன்னாள் ஜாமிஆ மஸ்ஜித் முத்தவல்லி ஃபக்ருதீன் பாருக், அஞ்சுமன் நுஸ்ரத்துல்த இஸ்லாம் நூலக செயலாளர் லியாகத் அலி கலீமுல்லாஹ், SMJ அமீன், அரபிக் கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

முஸ்லிம் லீக்கின் தீர்மானங்கள் கோட்டக்குப்பம் செயல் அலுவலரிடம் வழங்கப்பட்டது.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் பரகத் நகரில் மற்ற பகுதியை போன்று சாதாரண வரி விதிக்க பள்ளிவாசல் நிர்வாகம் கோரிக்கை.

டைம்ஸ் குழு

37-ம் ஆண்டில் கோட்டக்குப்பம் ரப்பானிய்யா அரபிக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை

Leave a Comment