23.3 C
கோட்டக்குப்பம்
December 15, 2025
Kottakuppam Times
கட்டுரை கல்வி கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

ஐ.ஏ.எஸ்.,இலவச பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு

புதுச்சேரி:ஐ.ஏ.எஸ்., இலவச பயிற்சி வகுப்பு தேர்விற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் மேம்பாட்டுக் கழகம் சார்பில் ஐ.ஏ.எஸ்., இலவச பயிற்சி தேர்வு விண்ணப்பங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாணவர்களுக்கு சேர்மன் பாலமுருகன் விண்ணப்பங்களை வழங்கினார்.மேலும் இது குறித்து சேர்மன் விடுத்துள்ள செய்தி
குறிப்பு:2015-16ம் ஆண்டிற்கு ஐ.ஏ.எஸ்., இலவச பயிற்சிக்கு கடந்த 26ம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.

வரும் 10ம் தேதி விண்ணப்பங்களை சமர்பிக்க கடைசி நாளாகும். எழுத்துத் தேர்வில் வெற்றி பெறும் 20 பேருக்கு சென்னையில் உள்ள ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையத்தில் ஒரு ஆண்டிற்கு இலவச பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி கட்டணம், உணவு, தங்குமிடம் செலவுகளை மேம்பாட்டுக் கழகம் ஏற்றுக் கொள்ளும். சென்னையில் தங்கி பயிற்சி பெற விருப்பமுள்ள இளைஞர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் புதுச்சேரி அண்ணா நகரில் உள்ள தலைமை அலுவலகம் மற்றும் காரைக்காலில் கிடைக்கும், விபரங்களுக்கு 0413-2202076, 04369-226300 என்ற தொலை பேசி எண்களில் தொடர்பு கொள்ளவும்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் பகுதியில் ரூ. 4 கோடியில் நகர மருத்துவமனை, குடிநீர் தொட்டி: நகர் மன்ற தலைவர் எஸ். எஸ் ஜெயமூர்த்தி தொடங்கி வைத்தார்

டைம்ஸ் குழு

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோட்டக்குப்பம் நகராட்சி அலுவலகத்தை வேறு இடத்தில் கட்டுவதற்கு எதிர்ப்பு.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் தமுமுக நகர அலுவலகத்தில் குடியரசு தின விழா

டைம்ஸ் குழு

Leave a Comment