29.9 C
கோட்டக்குப்பம்
May 18, 2024
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் பரகத் நகர் அல்-மஸ்ஜிதுல் முபாரக் வல் மதரஸாவின் 12-ஆம் ஆண்டு விழா.

கோட்டக்குப்பம் பரகத் நகர், அல் மஸ்ஜிதுல் முபாரக் வல் மதரஸாவின் 12-ஆம் ஆண்டு விழா நேற்று (27-03-2022) நடைபெற்றது. இதில் 360 மாணவ-மாணவிகள் மார்க்கக் கல்வி பயின்று வரும் மதரஸாவின் ஆண்டுவிழா நடைபெற்றது.

மதரஸாவில் பாடம் பயின்று வரும் மாணவ மாணவிகள் தாங்கள் கற்ற கல்வியை வெளிப்படுத்தும் விதமாக நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை பள்ளிவாசல் மற்றும் மதரஸா நிர்வாகிகள் செய்திருந்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் மாணவ/மாணவிகளின் பெற்றோர்கள் மதியம் 2 மணி முதலே காத்திருந்து, மதியம் 3 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சி தொழுகை இடைவேளையை தவிர்த்து இடைவெளி இல்லாமல் தொடர்ந்து இரவு 10.45 மணி வரை நடைபெற்றது.

அனைத்து மாணவ மாணவிகளின் மேடையில் ஏற்றி பேசவைத்த மௌலானா அக்பர் ஹஜ்ரத் தலைமையிலான ஆசிரிய பெருமக்கள் சிறப்பாக செய்திருந்தார்கள்.

அனைத்து மாணவ மாணவிகளுக்கும் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்காக பரிசுப் பொருட்கள் மற்றும் பொருளாதார உதவி செய்த அனைவருக்கும் நிர்வாகி நன்றியை தெரிவித்துக் கொண்டார்கள்.

நிகழ்ச்சியை பள்ளிவாசல் முத்தவல்லி பிலால் முஹம்மது, செயலாளர் அப்துல் நாசர், பொருளாளர் இப்ராஹீம் உள்ளிட்ட நிர்வாகிகளும், மதரஸா பொறுப்பாளர்கள் சபீர் வக்கீல், E. முஹம்மது ஷரீப், முஹம்மது ஷரீப் உள்ளிட்ட குழுவினர் சிறப்பாக செய்திருந்தார்கள்.

மாணவ மாணவிகளுக்கு பேரூராட்சி முன்னாள் தலைவர் அப்துல் ஹமீது தலைமையில் ஊரின் முக்கிய விருந்தினர்கள் பரிசுப் பொருட்களை வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில் 22-வது வார்டு கவுன்சிலர் நாசர், 17-வது வார்டு கவுன்சிலர் ரஹ்மத்துல்லாஹ் மற்றும் அனைத்து பள்ளிவாசல் முத்தவல்லிகள், இமாம்கள், நிர்வாகிகள், மற்றும் பெற்றோர்கள் திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டு உள்ளடங்கிய வாக்காளர் பட்டியல் 2024. (PDF)

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசல் மையவாடி புனரமைப்பு.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பத்தில் யாருக்கேனும் சளி, ஜுரம், இருமல் இருந்தால் உடனே தெரியப்படுத்தவும் – சுகாதாரத்துறை ரவி அவர்கள் அறிவுரை.

Leave a Comment