June 28, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பதில் வீடு தேடிச் சென்று பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி.

தமிழக முதல்வரின் உத்தரவின்படி, தமிழ்நாட்டில் அனைவருக்கும் கோவிட் தடுப்பூசி செலுத்தும் வகையில், வீடு தேடி கோவிட் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக, கோட்டக்குப்பதில் இன்று முதல் வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு அவர்களது வீடுகளிலேயே தடுப்பூசி செல்லத்தப்பட உள்ளது.

அதன், முதற்கட்டமாக கோட்டக்குப்பம் ரஹ்மத் நகர் பகுதி, ஹாஜி ஹுசைன் தெரு, நாட்டாண்மை தெரு, பள்ளிவாசல் தெரு, பட்டினத்தார் தெரு போன்ற பகுதியில் இன்று வீடாக சென்று தடுப்பூசி செலுத்தும் திட்டம் நடைபெற உள்ளது. ஆகவே, தடுப்பூசி செலுத்தாதவர் இத்திட்டத்தினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும் சந்தேகங்கள் மற்றும் விபரங்களுக்கு:
திரு. ரவி,
9486476433
சுகாதார ஆய்வாளர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

அல்-மஸ்ஜிதே முபாரக் வல் மதரஸா தீனியத் மக்தப் மதரஸா 8-ம் ஆண்டு விழா

கோட்டக்குப்பதில் நகர்புற நலவாழ்வு மையம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் போலீஸ் சிறுவர் மற்றும் சிறுமியர் மன்றம் சார்பில் திறன் தேர்வு.

டைம்ஸ் குழு

Leave a Comment